பொது செய்தி

தமிழ்நாடு

'யோகா, தியானம் மூலம் குற்றமற்ற இந்தியாவை உருவாக்க முடியும்'

Added : பிப் 12, 2020
Advertisement

ஓசூர்: ''யோகா மற்றும் தியானம் மூலம், குற்றமற்ற இந்தியாவை உருவாக்க முடியும்,'' என, பாபா ராம்தேவ் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மத்திகிரி கூட்ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம், யோகாவின் அவசியத்தை வலியுறுத்தி, நேற்று, இலவச யோகா சிகிச்சை மற்றும் தியான முகாம் துவங்கியது. வரும், 14 வரை முகாம் நடக்கிறது. பாபா ராம்தேவ், யோகா மற்றும் தியான முகாமை துவக்கி வைத்து, உடல், மனம், ஆரோக்கிய மேம்பாடுகள் குறித்து பேசினார். தொடர்ந்து, பிரணாயாமம், சூரிய நமஸ்காரம், சின்முத்திரா, மஹா முத்ரா போன்ற ஆரோக்கிய யோகா பயிற்சியை மக்களுக்கு கற்றுத்தந்தார். மாநில அளவிலான யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை கவுரவித்த பாபா ராம்தேவ், நிருபர்களிடம் கூறியதாவது: உடல் உறுப்புகள் அனைத்தையும், யோகா மற்றும் தியானத்தால் கட்டுப்படுத்த முடியும். யோகா மற்றும் தியானத்தை தொடர்ந்து செய்யும்போது, உடல், மனம் கட்டுபடும். அறிவியல் பூர்வமாக, உடலுக்கும், யோகாவிற்கும் தொடர்பு உள்ளது. மனநிம்மதி மற்றும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். யோகா, தியானம் மூலம், பயங்கரவாதம், பாலியல் பலாத்காரம், குற்ற சம்பவங்கள் என எதுவும் இல்லாத, குற்றமற்ற இந்தியாவை எளிதில் உருவாக்க முடியும். மதம், நிறம், மொழியை கடந்து, அனைவரும் ஏற்று கொள்ளும் சிறந்த பயிற்சி யோகா. நாள்தோறும் ஒரு மணி நேரம் யோகா செய்யும் போது, வலிமை, ஆரோக்கியம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார். முகாமில், முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடசாமி, பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X