சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமாநில தொழிலாளி கழுத்தறுத்து கொலை

Added : பிப் 12, 2020
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, வட மாநில தொழிலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். ஓசூர் அடுத்த, பொம்மாண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் பின்புறம், 26 முதல், 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று, கழுத்து அறுக்கப்பட்டு, கைகளில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின்படி அங்கு சென்ற, மத்திகிரி போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். கொலையானவரின் பாக்கெட்டிலிருந்த அடையாள அட்டையின் மூலம், அவரது பெயர் திபுகக்கரே என்பதும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர், பொம்மாண்டப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளது விசாரணையில் தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து, எந்த தகவலும் தெரியவில்லை. மதுபோதையில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X