சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசூர் தி.மு.க., நிர்வாகி கொலையில் சரணடைந்த 4 பேருக்கு 6 நாள் கஸ்டடி

Added : பிப் 12, 2020
Advertisement

ஓசூர்: ஓசூரில், தி.மு.க., நிர்வாகி கொலையில், சரணடைந்த நான்கு பேரை, ஆறு நாள் கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓசூர், இமாம்படா பகுதியை சேர்ந்தவர் மன்சூர் அலி, 55; கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சிறுபான்மை அணி துணை அமைப்பாளர்; கடந்த, 2 இரவு, ஓசூர் காமராஜ் காலனியில், நான்கு பேர் கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இது தொடர்பாக, ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த கஜேந்திரன், 32, முதுகானப்பள்ளி சந்தோஷ்குமார், 22, தளி ராம்நகரை சேர்ந்த கோவிந்தராஜ், 23, மருதாண்டப்பள்ளி யஷ்வந்த்குமார், 24, ஆகியோர், ஈரோடு மாவட்டம், கொடுமுடி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த, 4ல் சரணடைந்தனர். அவர்கள், நேற்று முன்தினம் ஓசூர் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி தாமோதரன் உத்தரவின்படி, அவர்கள் நான்கு பேரும், பலத்த பாதுகாப்புடன் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, க?ஜேந்திரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு, ஏழு நாள் கஸ்டடி வழங்கக்கேட்டு, ஓசூர் டவுன் போலீசார் நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன், ஆறு நாட்கள் கஸ்டடி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் நான்கு பேரையும் ரகசிய இடத்தில் வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X