சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 15 ஆண்டு சிறை

Added : பிப் 12, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரியை அடுத்த, கோனேகவுண்டனூரை சேர்ந்த விவசாயி சிவா, 25; இவர் கடந்த, 2016 நவ.,1ல், 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அப்பெண்ணின் தந்தை, 2016 நவ.,13ல் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை கடத்திய குற்றத்துக்காக, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும், போக்சோ சட்டத்தில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில், அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X