ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று: அமைச்சர் பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று: அமைச்சர் பாராட்டு

Added : பிப் 12, 2020
Share

ராசிபுரம்: ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு, இந்திய அரசின் தேசிய சுகாதார மையத்தினால், தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் அத்தனூர், பிள்ளாநல்லூர் பட்டணம் உள்ளிட்ட டவுன் பஞ்சாயத்துகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் சரோஜா தொடங்கி வைத்தார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக பேசி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ராசிபுரம் நகராட்சி, வார்டு எண், 8 பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியை பார்வையிட்டார். ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு இந்திய அரசின் தேசிய சுகாதார மையத்தினால் தேசிய தரச்சான்றை வழங்கி, மருத்துவர்களை பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ராசிபுரம் அரசு மருத்துவமனையை, 2019 செப்டம்பர், 23ம் தேதி முதல், 25ம் தேதி வரை, தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மாநில அளவில், 93.1 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளது. இதையடுத்து தேசிய சுகாதார மையத்தால், 'தேசிய தரச்சான்று' வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X