சிவப்பு கொண்டைக்கடலை வரத்து அதிகரிப்பால் விலை சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவப்பு கொண்டைக்கடலை வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

Added : பிப் 12, 2020
Share
சேலம்: வடமாநில சிவப்பு கொண்டைக்கடலை வரத்து அதிகரிப்பால், அதன் விலை, கிலோவுக்கு, 10 ரூபாய் சரிந்தது. தமிழகத்தின், சிவப்பு கொண்டைக்கடலை தேவையை, 80 சதவீதம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்கள், 20 சதவீதம், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் பூர்த்தி செய்கின்றன. தற்போது வடமாநிலங்களில், சிவப்பு கொண்டைக்கடலை அறுவடை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின்

சேலம்: வடமாநில சிவப்பு கொண்டைக்கடலை வரத்து அதிகரிப்பால், அதன் விலை, கிலோவுக்கு, 10 ரூபாய் சரிந்தது. தமிழகத்தின், சிவப்பு கொண்டைக்கடலை தேவையை, 80 சதவீதம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்கள், 20 சதவீதம், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் பூர்த்தி செய்கின்றன. தற்போது வடமாநிலங்களில், சிவப்பு கொண்டைக்கடலை அறுவடை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் விருதுநகர், சேலம் - லீபஜார், சென்னை மார்க்கெட்டுகளுக்கு, கடந்த வாரம் வரை, வாரம், 80 லாரிகளில் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த கொண்டைக்கடலை, தற்போது, 150 லாரிகளாக உயர்ந்துள்ளது. இதனால், அதன் விலை, மார்க்கெட்டில், நேற்று கிலோவுக்கு, 10 ரூபாய் சரிந்தது. அதன்படி, கடந்த வாரம், சிவப்பு கொண்டைக்கடலை பெருவெட்டு ரகம், கிலோ, 74க்கு விற்றது, 64 ரூபாய், சிறு ரகம், 64க்கு விற்றது, 54 ரூபாயாக சரிந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X