பொது செய்தி

தமிழ்நாடு

அயோத்தியாப்பட்டணம் தி.மு.க.,வில் 'லடாய்': ஒன்றிய பொறுப்பாளர் - கவுன்சிலர் மோதல்

Added : பிப் 12, 2020
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், 16வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ஆறுமுகம், 45, நேற்று, சேலத்தில், நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், என்னைப்பற்றி அவதூறு பரப்பி, கட்சித்தலைமை, தொண்டர்களை ஏமாற்றிவருகிறார். எதிர்தரப்பில், 25 லட்சம் ரூபாய், 'இன்னோவா' கார் பெற்றுக்கொண்டு, ஒன்றிய குழு தலைவர் தேர்தலில், எதிராக செயல்பட்டதாக

சேலம்: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், 16வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ஆறுமுகம், 45, நேற்று, சேலத்தில், நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், என்னைப்பற்றி அவதூறு பரப்பி, கட்சித்தலைமை, தொண்டர்களை ஏமாற்றிவருகிறார். எதிர்தரப்பில், 25 லட்சம் ரூபாய், 'இன்னோவா' கார் பெற்றுக்கொண்டு, ஒன்றிய குழு தலைவர் தேர்தலில், எதிராக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். அதை நிரூபித்தால், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய தயார். நிரூபிக்க தவறினால், ஒன்றிய பொறுப்பாளர் பதவி, மனைவி ?ஹமலதா வகிக்கும் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறு கவுன்சிலர்களில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக பழிவாங்க திட்டமிட்டு, மொபைல் போனில் மிரட்டிவருகிறார். நான் உள்பட, ஏழு தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக, தேர்தலில் சுயேச்சைகளை களமிறக்கினார். அதற்காக, நிறைய பணத்தையும் செலவு செய்தார். அதை மீறி, மக்கள் ஆதரவில், 800 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அதனால், துணைத்தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். அதிலும், உள்ளடி வேலை செய்து தடுத்துவிட்டார். இதுகுறித்து, கட்சித்தலைமைக்கு புகாரனுப்பியும் நடவடிக்கையில்லை. தற்போது, என்னையும், குடும்பத்தையும், பல வகையில் அவமானப்படுத்தி, கட்சியினர் மத்தியில் பிரிவினை உருவாக்கியுள்ளார். எங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஒன்றிய பொறுப்பாளர் தான் முழு பொறுப்பு. அவதூறு பரப்புவதை நிறுத்தாவிட்டால், மானநஷ்ட வழக்கு தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, விஜயகுமார் கூறுகையில், ''ஆறுமுகம் சொல்வதில் எதுவும் உண்மையில்லை. யாருடன் காரில் சென்றார்; கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன் காலில் விழுந்து ஆசி பெற்றது உள்ளிட்ட ஆதாரங்கள், கட்சித்தலைமைக்கு அனுப்பப்பட்டது. அவர், கவுன்சிலர் என்பதால், கட்சித்தலைமை நடவடிக்கையை தவிர்த்தது. பல விஷயங்களை வெளிப்படையாக சொல்ல இயலாது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X