சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 பெண் குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது

Added : பிப் 12, 2020
Advertisement

ஆத்தூர்: குடும்பத்தகராறில், இரு பெண் குழந்தைகளை கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாயை, போலீசார் கைது செய்தனர். ஆத்தூர், தம்மம்பட்டி அருகே, செங்காட்டைச் சேர்ந்தவர் இளையராஜா, 35; நெல் அறுவடை இயந்திர வாகன டிரைவர். இவரது மனைவி திவ்யா, 30. இவர்களது மகள்கள், வன்ஷிகா, 3, ஹன்ஷிகா, 1. கடந்த, 7ல், மாமியார் கலைச்செல்வியுடன், திவ்யாவுக்கு தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த திவ்யா, தன் இரு பெண் குழந்தைகளை, விவசாய கிணற்றில் வீசிவிட்டு, அவரும் குதித்தார். இரு குழந்தைகள் மூச்சுத்திணறலில் உயிரிழந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யா, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர் மீது, இரு குழந்தைகளை கொன்றது, தற்கொலைக்கு முயன்றது என, இரு பிரிவில், தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, நேற்று, திவ்யாவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X