சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியுடன் திருமணம்: போக்சோவில் சிக்கிய வாலிபர்

Added : பிப் 12, 2020
Advertisement

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன், 24; பட்டுத்தறி தொழில் செய்யும் இவர், தன் தறிக்கூடத்துக்கு வந்துசென்ற, 17 வயது சிறுமியை, திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜன., 31ல், சிறுமியின் பெற்றோர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார், மஞ்சுநாதனிடம் விசாரித்ததில், சிறுமிக்கு, 18 வயதானதாக, பள்ளி சான்றிதழை வழங்கினார். பெற்றோர், பிறப்பு சான்றிதழில், 17 வயது என, சமர்ப்பித்தனர். இதனால், முடிவெடுக்க முடியாத போலீசார், சேலம், முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், மஞ்சுநாதன், சிறுமியை ஆஜர்படுத்தினர். சான்றிதழ்களை ஆய்வு செய்த நீதிபதி செந்தில்குமார், பிறப்பு சான்றிதழ்தான் சரியானது. அதனால், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, திருமணம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார், மஞ்சுநாதன் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X