கொரோனா பாதிப்புகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மாயம்: சீனா மீது வலுக்கும் சந்தேகம்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (27)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிச., மாத இறுதியில், உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, 'கொரோனா வைரஸ்' உருவானது. வுஹான் நகரில் வசிப்பவர்களிடம் இருந்து, இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, வுஹானின் எல்லைகளை மூடும் நடவடிக்கையை, கடந்த ஜன., 23ம் தேதி, சீன அரசு மேற்கொண்டது.







கடுமையான பாதிப்பில் இருக்கும் வுஹான் நகரைப் பற்றிய செய்திகள் எதுவும் ஆதாரத்துடன் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், சென் கியுஷி என்ற பத்திரிகையாளர், மொபைல்போன் வழியாக, வுஹானின் உண்மை நிலையை சேகரித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். குறிப்பாக, வைரஸ் பாதிப்பால் சக்கர நாற்காலியில் இறந்து கிடக்கும் குடும்பத்தினர்; மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆட்களின்றி சிரமப்படுவது போன்ற காட்சிகளை ஆவணப்படுத்தினார்.






மேலும், வுஹான் நகரில் மக்கள் வெளியேற அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய குடியிருப்புகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மனநிலை ஆகியவற்றை ஆவணப்படுத்தினார்.அவற்றை டுவிட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த ஆவணங்கள் வழியாகத் தான், வெளியுலகிற்கு வுஹான் நகரத்தின் உண்மை நிலை தெரிய வந்தது.






இதற்கு கண்டனம் தெரிவித்த சீன அரசு, 'மக்களை அச்சத்தில் ஆழ்த்தும்படியான செய்திகளையும் தகவல்களையும் யாரும் பரப்பக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்' என, சென் கியுஷிக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், பத்திரிகையாளர் சென் கியுஷி மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். அவரது உறவினர்கள், 'கடந்த வியாழக்கிழமை இரவு 7:00 மணி முதல் சென் கியுஷியைத் தொடர்புகொள்ள முடியவில்லை' என, டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.






இறுதியாக சில கேள்விகள்

இறுதியாக சென் கியுஷி தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஒரு பெரிய அறையில் 1,000 படுக்கைகளை அடுக்குவது எளிது. ஆனால், அதில் 1,000 நோயாளிகள் எப்படி தங்கப்போகிறார்கள்? அன்றாடத் தேவைகளுக்கு என்ன செய்வார்கள்? 24 மணி நேரமும் முகமூடி அணிந்து செயல்படுவார்களா? போதுமான அளவில் ஆக்சிஜன் அவர்களுக்குக் கிடைக்குமா? போதிய அளவில் மருந்துகள் இருக்கிறதா?' போன்ற கேள்விகளை அரசை நோக்கி எழுப்பியிருந்தார்.







வலுக்கும் சந்தேகம்


சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்கும் சீன அரசு, கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பரப்பும் கணக்குகளை முடக்கி வந்தது. தற்போது, உண்மையை வெளிக்கொண்டு வந்த பத்திரிக்கையாளரும் மாயமாகியிருப்பதால், சீன மக்கள் அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். கொரோனா விசயத்தில், சீனாவின் மர்மமான நடவடிக்கைகளை உலக நாடுகள் சந்தேகிக்கத் துவங்கியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
19-பிப்-202004:59:08 IST Report Abuse
 nicolethomson நாளைமுதல் புதுவை பீச்சில் இதற்காக போராட்டம் நடத்தலாமா?
Rate this:
Share this comment
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
18-பிப்-202018:19:42 IST Report Abuse
Kumar periyaar இவரு நமது மோடி அரசு போன்றவர் போல்தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-பிப்-202017:43:24 IST Report Abuse
Indhuindian கூப்புடுங்கப்பா நம்ம பிரகாஷ் கராட், பிருந்தா கராட், சீதாராம் யெச்சூரி, டி ராஜா மட்டும் லோகல்லே இருக்கற முத்தரசன், நல்லகண்ணு. அனுப்புங்க அவங்களே சீனாவுக்கு கண்டு பிடிச்சிடுவாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X