ஆம்ஆத்மியிடம் இருந்து பா.ஜ., காங்., கற்க வேண்டிய பாடம்| Dinamalar

ஆம்ஆத்மியிடம் இருந்து பா.ஜ., காங்., கற்க வேண்டிய பாடம்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (19)
Share
kejriwal, arvindkejriwal, bjp, aamaadmi, congress, rahul, rahulgandhi, priyanka, priyankagandhi, cong, காங்கிரஸ், காங்., பாஜ, பாரதியஜனதா, கெஜ்ரிவால், அர்விந்த் கெஜ்ரிவால், அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி தேர்தல், ராகுல், ராகுல்காந்தி, பிரியங்கா, பிரியங்கா காந்தி,

புதுடில்லி: டில்லி தேர்தல் முடிவுகளில் இருந்து, மத்தியில் ஆளும் பா.ஜ.,வும் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் கற்க வேண்டிய பாடம் நிறைய உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்த மக்கள், சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போட்டுள்ளனர். இரண்டு தேர்தலிலும் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை மக்கள் தெளிவாக முடிவு எடுத்துள்ளனர். நாட்டை வழிநடத்த நரேந்திர மோடியும், டில்லியை வழிநடத்த அரவிந்த் கெஜ்ரிவாலையும் தேர்வு செய்துள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள், டில்லி மீது கெஜ்ரிவால் கொண்டிருந்த அன்பையும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்ல பா.ஜ., தவறிவிட்டது என்பதையும் வெளிக்காட்டியுள்ளது.


முதல்பாடம்
latest tamil news


இது பா.ஜ.,விற்கான பாடம். அடுத்த தேர்தலுக்கு முன், தன்னுடைய டில்லி தலைவரை பா.ஜ., வளர்க்க வேண்டும். இதன் மூலம், யார் தன்னுடைய முதல்வர் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ள முடியும். தேர்தலுக்கு சிறிது நாட்களுக்கு முன்னர் ஒரு தலைவர் உருவாகிவிட முடியாது.

கட்சியிலும், வாக்காளர்கள் மத்தியிலும் தன்னை வளர்த்து கொள்ளவும், திறமையை வெளிப்படுத்தவும் அவருக்கு சில ஆண்டுகள் தேவைப்படும். உ.பி., மற்றும் மஹாராஷ்டிராவில் முதல்வர் வேட்பாளர் இல்லாமல் பா.ஜ., வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், மீடியா ஆதிக்கம் நிறைந்த உலகில், தன்னுடைய முதல்வர் யார் என்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு வாக்காளரும் ஆர்வமாக இருப்பார்.

மக்கள் இடையே கட்சி வேறுபாடு இருக்கலாம். ஆனால், தன்னுடைய தலைவர் யார் என்பதை அறிந்து கொள்வதில், ஒவ்வொருவரும் ஆர்வமாக உள்ளனர்.டில்லியில், ஒரு தலைவரை முன்னிறுத்தும்போது, கட்சி தொண்டர்களின் உழைப்பும், ஹிந்துத்துவா திட்டமும், அக்கட்சிக்கு சாதகமாக அமைந்திருக்கும். தற்போது, பா.ஜ.,வுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைத்திருந்தாலும் குறைந்த சீட்களே கிடைத்துள்ளன.

மக்களை பிரித்து அரசியல் செய்தல் இருமுனை கத்தியை போன்றது. கெஜ்ரிவாலின் வெற்றிக்கு முக்கிய காரணம், பிரித்து வைக்கும் அரசியலுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்தனர்.டில்லியில் காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாடுகள் காரணமாக அக்கட்சியின் ஓட்டு வங்கி ஆம்ஆத்மிக்கு மாறியது. இதனால், 5 சதவீத ஓட்டுகளை மட்டுமே கால்., பெற்றது.


இரண்டாவது பாடம்:இதுவும் பா.ஜ.,வுக்கு தான். உங்களின் உணர்வுகள், திட்டங்களை பாழ்படுத்த அனுமதிக்கக்கூடாது. தவறான செயலை செய்வதை தவிர்க்க வேண்டும்.2017 ல் டில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் தோல்வியடைந்த உடன் கெஜ்ரிவால், விரைவாக எப்படி பாடம் படித்தார் என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். 2015 முதல் 17 வரை மோடியை எதிர்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தினார். 2017ல் ஆம் ஆத்மி தோல்வியடைந்த உடன், கெஜ்ரிவால் தனது குரலை மாற்றினார். மோடியை விமர்சிப்பதை குறைத்ததுடன், ஹிந்து - முஸ்லிம் அரசியலில் தான் இழுத்துவிடப்படுவதை தவிர்த்தார்.

உங்களின் எதிரிகள், தேசியவாதம், ஹிந்துத்துவா ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் போது, உங்களின் முயற்சி மட்டும் வெற்றி பெறாது. இதனால், தான் குடியுரிமை சட்டம் அல்லது ஷாகீன் பாக் போராட்டம் குறித்து கெஜ்ரிவால் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. தனது சொந்த வளர்ச்சி திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்திய அவர், தனது கவனத்தை திசை திருப்பிய பா.ஜ.,வின் அரசியல் விளையாட்டையும் கண்டுகொள்ளவில்லை. எதிரிகளையும் கண்டுகொள்ளவில்லை. இதனை செய்ய காங்கிரஸ் மறந்துவிட்டதால், தேர்தல் களத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.


latest tamil newsஆனால், கெஜ்ரிவால் படிக்க வேண்டிய பாடம் உள்ளது. டில்லியின் நகர்ப்புற பகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருந்தாலும், புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஓட்டை இழந்துள்ளது. அவரால், எல்லா மக்களுக்கும், எல்லாவாகவும் இருக்க முடியாது. எந்த கட்சியாலும் முடியாது. தன்னையும், கட்சியையும் நகர்ப்புறத்தில் மட்டும் நிலைநிறுத்துவது அவருக்கு சிறப்பாக இருந்தது. தேசிய அளவில் கட்சியை விரிவுபடுத்த கிராமப்புற துருப்பு சீட்டை பயன்படுத்துவது சுயதோல்வியை சந்திக்கும். இதனை அவர் செய்தால், பல ஜாதிகளில் மற்றும் மத ரீதியிலான கட்சியில் இருந்து பல போட்டியாளர்களை கெஜ்ரிவால் சந்திக்க நேரிடும். மற்ற மாநிலங்களிலும் நகர்ப்புற பகுதிகளில் ஆம் ஆது்மியின் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

மோடிக்கு எதிரான மீடியாக்கள் மற்றும் பல மாநில கட்சிகள் கெஜ்ரிவாலை கொண்டாடலாம். ஆனால் டில்லியை தாண்டி கெஜ்ரிவால் வளர்ச்சி பெறுவதை, தங்களது சொந்த காரணங்களுக்காக அவர்கள் விரும்ப மாட்டார்கள். கெஜ்ரிவால் டில்லியை தாண்டி வளர்ந்தால், அவரை சமாளிக்க வேண்டும் என்பதற்காக, தங்களது பலத்தை சமரசம் செய்ய வேண்டி வரும் என்பது அவர்களுக்கு தெரியும்.


latest tamil news


காங்கிரஸ் கற்றுக் கொள்ள வேண்டிய பெரிய பாடம் இது தான்: முயல்களுடன் ஓடி வேட்டைக்காரர்களுடன் வேட்டையாடுவதன் மூலம் உங்களால் வெற்றி பெற முடியாது. ஜவஹர்லால் நேரு பல்கலை, ஜாமியா பல்கலை மற்றும் பிற இடங்களில் சிறு சிறு குழுக்களுடன் இணைந்து கொண்டு செயல்பட்டால் ஹிந்து வாக்காளர் உங்களை தேடி வருவார் எதிர்பார்க்க முடியாது.

டில்லியில் பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தனது ஓட்டுகள் ஆம் ஆத்மிக்கு செல்ல காங்கிரஸ் அனுமதித்துவிட்டது. இனிவரும் காலங்களில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் வளர வேண்டுமானால் ஒன்றிடம் இருந்து ஒன்று இழக்க வேண்டும். ராகுல் மற்றும் பிரியங்கா மூலம் எதையும் செய்ய முடியவில்லை என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்கு தெரியும். ஆனால், வெளியில் சொல்ல முடியாது. வரலாற்றில் குப்பை தொட்டியை நோக்கி சோனியா குடும்பம் செல்கிறது. இவ்வாறு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X