பொது செய்தி

இந்தியா

டிரம்ப் இந்தியா வருகை: பிரதமர் மகிழ்ச்சி

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (7)
Advertisement
modi, PmModi, trump, donaldtrump, india, us, america, பிரதமர்மோடி, டிரம்ப், மோடி, டொனால்ட்டிரம்ப், இந்தியா, அமெரிக்கா,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இம்மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியா வர உள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். அவர் மிகச்சிறந்த மனிதர். நான் இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இம்மாத இறுதியில் இந்தியா செல்ல உள்ளேன் எனக்கூறினார்.

இந்நிலையில், டிரம்ப் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.





இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலினாவும் வரும் 24 மற்றும் 25 ல் இந்தியா வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நமது மதிப்பிற்குரிய விருந்தினருக்கு, இந்தியா மறக்க முடியாத வரவேற்பு அளிக்கும். இந்த பயணம் சிறப்பான ஒன்று. இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்பை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்த உதவும்



ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையில், இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியான கொள்கைகளை பங்கிட்டு கொள்கின்றன இரு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் சிறந்த ஒத்துழைப்பை அளித்து வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு இரு நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, உலகத்திற்கே பயனுள்ளதாக அமையும்.


இவ்வாறு அந்த பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANITHAN -  ( Posted via: Dinamalar Android App )
12-பிப்-202018:36:30 IST Report Abuse
MANITHAN டிரம்ப் மட்டும் இந்தியாவுக்கு வந்து போனால்! படித்த இந்திய இளைஞர்கள் அத்துனை பேருக்கும் வேலை கிடைத்துவிடும்! வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கிடைத்து விடும்! வீடு தேடி ஒவ்வொரு இந்தியனுக்கும் உணவு வந்துவிடும்! நாட்டில் பசி பட்னி வருமை ஒழிந்துவிடும்! அய்யோ இனி ஒரே ஜாலிதான் ஹய்யா ! சப்கேசாத்! சப்கேவிகாஷ்! சப்கா தேஷ்! பாரத்மாதாகி ஜெய்.................!
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
12-பிப்-202017:39:44 IST Report Abuse
Ramesh இரண்டு உலக ஜனநாயகத்தின் தலைவர்கள் சந்திப்பு ...வரவேற்புகள் ...
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-202016:13:57 IST Report Abuse
ஆப்பு அவருக்கு மட்டுமா 130 கோடி இந்தியர்களின் வாழ்வில் பொன்னாள். அமெரிக்காவில் 35 கோடி மக்களின் நன்னாள்.கார்ப்பரேட்களுக்கு புனிதநாள். உலகத்துக்கே ஒசந்த நாள். அப்பிடி சொல்லிக்கிட்டே போகலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X