பொது செய்தி

இந்தியா

ஓட்டுச்சீட்டுக்கு 'நோ': தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக ஓட்டுச்சீட்டு பயன்படுத்தும் பேச்சுக்கு இடமில்லை என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக முன்பு இருந்தது போல ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வேண்டும் என்றும், அது இருந்தால் மட்டுமே நம்பகத்தன்மை அதிகரிக்கும் எனவும் பல்வேறு
ElectionCommissioner, EVM, SunilArora, VotingMachine, தேர்தல், கமிஷனர், மின்னணு, ஓட்டுப்பதிவு, இயந்திரம், ஓட்டுச்சீட்டு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக ஓட்டுச்சீட்டு பயன்படுத்தும் பேச்சுக்கு இடமில்லை என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக முன்பு இருந்தது போல ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வேண்டும் என்றும், அது இருந்தால் மட்டுமே நம்பகத்தன்மை அதிகரிக்கும் எனவும் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன.

இது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா டில்லியில் கருத்தரங்கில் பங்கேற்று பேசியதாவது: ஒரு காரை போல, பேனாவை போல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்த முடியாது.


latest tamil news


இந்த இயந்திரங்களை ஹேக் செய்யவோ, தகவல்களை மாற்றியமைக்கவோ முடியாது. கடந்த 20 ஆண்டுகளாக மின்னணு இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில், மீண்டும் பழைய முறையில் ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கு இடமில்லை. சுப்ரீம் கோர்டே இயந்திரத்தை பயன்படுத்த சம்மதித்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
moodi masthan beembai - Baliyal Jalsa Party kovai,இந்தியா
13-பிப்-202009:19:53 IST Report Abuse
moodi masthan beembai பரிசோதனை அடிப்படையில் ஓட்டுசீட்டு முறை கண்டிப்பாக தேவைபடுகிறது. குறைந்த பட்சம் 50 சதவீத ஓட்டுச்சாவடிகளில் ரேண்டம் (அல்லது குலுக்கல்) முறையில் ஒட்டுச்சீட்டுமுறையை அமல்படுத்தினால், எந்த வேட்பாளர் வெற்றி பெற்றார் என்று பொதுமக்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகிவிடும். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் 50% தொகுதிகளில் EVM+VVPAT முறையிலும் 50% தொகுதிகளில் ஓட்டுச்சீட்டு முறையையிலும் ஒட்டு போடும் முறையை கொண்டுவரவேண்டும். எந்தெந்த தொகுதிகளில் EVM வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்காமல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் EVM தொகுதிகளை தேர்ந்து எடுக்கவேண்டும். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் ஓட்டுச்சீட்டுக்களை எண்ணவேண்டும். பின்பு EVM ஓட்டுகள் எண்ணப்படவேண்டும். சாதக பாதகங்கள்: 1. அரசியல் கட்சிகள் கட்சிகள் முன்னிலையில், குலுக்கல் முறையில் (ரேண்டம் முறையில் ) EVM பயன்படுத்தப்படும் தொகுதிகள், ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும் தொகுதிகள் முடிவுசெய்வபடுதால் வெற்றி, தோல்விகளுக்கு அரசியல் கட்சிகள் EVM ஐ குறை சொல்லமுடியாது. 2. ஒருவேளை EVM ல் குறைபாடு அல்லது முறைகேடு செய்தாலும் அதனுடைய தாக்கம் 50% க்கும் குறைவாகவே இருக்கும். எல்லா EVM லும் VVPAT ஐ இணைப்பதன் மூலம் முறைகேட்டை தவிர்க்கவோ, குறைக்கவோ முடியும். குறைகள்: 3). 50% தொகுதிகளில் வாக்குச்சீட்டு முறையினால் தற்போதைய செலவைவிட 50% கூடுதல் செலவு 4). தற்போதைய வாக்கு எண்ணிக்கை நேரத்தை விட 50% கூடுதல் நேரம் ஆக வாய்ப்பு இருக்கிறது.
Rate this:
Cancel
12-பிப்-202021:58:54 IST Report Abuse
Raj Kumar Meshack we want election commission officer like TN Shashan...
Rate this:
Cancel
POORMAN - ERODE,இந்தியா
12-பிப்-202021:58:30 IST Report Abuse
POORMAN EVM கண்டிப்பாக சரியான வழி முறை இல்லை. தில்லு முல்லு முக்கியமான இடத்துக்கு மட்டும் செய்வார்கள். தேனில செஞ்ச மாதிரி. மற்றபடி அப்பப்போ பிரியா விட்டு தன்னோடு செல்வாக்கு என்னன்னு முக்கியமில்லாத தேர்தல வச்சு தெரிஞ்சிகிறாங்க. இதுல நல்லவர் மாதிரி நடிப்பு வேற‌.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X