சென்னை: கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு புதிய வழிமுறைகள் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை: கருணை அடிப்படையில் வேலை பெற குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறைந்த அரசு ஊழியர் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

கருணை அடிப்படையிலான வேலைகள் C அல்லது D பிரிவில் வழங்கப்படும். கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு அரசு ஊழியர்கள் இறந்த 3 ஆண்டிற்குள் அவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE