சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இப்படி செய்தால் இனி குற்றங்கள் நிகழாது

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 இப்படி செய்தால் இனி குற்றங்கள் நிகழாது

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அன்று, ஹரியானா மாநிலத்தில், ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், 3,000 ஆசிரியர்கள், லஞ்சம் பெற்று பணியமர்த்தப்பட்டனர். இது தொடர்பாக எழுந்த புகாரில் சிக்கி, அந்த மாநில முதல்வர் முதல், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வரை, தண்டிக்கப்பட்டு, இன்று வரை, சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இன்று, தமிழகத்தில், பல்வேறு அரசு பணிக்காக, தங்களை தயார் செய்து கொண்டிருக்கும், பல ஆயிரம் மாணவர்களின் மனநிலை, இனி, தேர்வாணையத்தை நம்பி, எப்படி தேர்வு எழுதுவது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தேர்வாணைய முறைகேட்டில், கீழ்மட்ட அரசு ஊழியர்கள் மட்டும் இப்படி துணிந்து, ஈடுபட்டிருக்க மாட்டார்கள். தற்போது, மாட்டியது எல்லாம், சிறு மீன்களே; சிக்காத திமிங்கலங்கள், இன்றும் சுதந்திரமாக சுற்றி வருகின்றன.

கடந்த, 1970களில், அரசு பணி நியமனத்தில் உட்புகுந்த ஊழலால், தற்போது ஊழல் செய்யாத ஒரு அரசு ஊழியரை பார்க்க வேண்டும் என்றால், அது அதிசயமாக உள்ளது. துவக்க கல்வி முதல் கல்லுாரி கல்வி வரை, கல்வியுடன், ஒழுக்கத்தையும் சேர்த்து போதிக்கவில்லை. அப்படி செய்திருந்தால், இன்று அரசு வேலைவாய்ப்புகளில் நடந்த முறைகேடுகளை தடுத்து இருக்க முடியும்.தகுதி இல்லாதோரை, அரசு பதவிகளில் அமர வைத்து, அவர்கள் ஊழல் செய்கின்றனர் என, சொன்னால் எப்படி? தமிழகத்தில், தேர்வு ஆணையத்தில் நடந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள, உயர் அதிகாரிகள் முதல், அரசியல்வாதிகள் வரை, கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அதற்கு, முதற்கட்டமாக, இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற, மாநில அரசு உத்தரவிட வேண்டும். அப்போது தான், தவறு செய்த திமிங்கலங்களையும் பிடித்து, சிறைவாசம் காண வைக்க முடியும்; கடும் தண்டனையும் வாங்கி தர இயலும். இனி வரும் காலங்களில், இதுபோன்ற குற்றங்கள் நிகழாது!

கோடையில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படாது!

சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ், மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், நீர்வள ஆதார துறையின் கட்டுப்பாட்டில், ௧௩ ஆயிரத்து, ௭௧௦ ஏரிகள் உட்பட, 39 ஆயிரத்து, 202 ஏரிகள் உள்ளன. இதில், 5.40 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள், ஏரிகள் வாயிலாக, பாசன வசதி பெறப்பட்டு வந்தது.

நிலத்தடி நீர் சரிவால், பல ஆண்டுகளாக மழையின்றி வறட்சி காணப்பட்டது. கிணற்றுப் பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகள், ஆழ்குழாய் கிணறு அமைத்து, விவசாயத்தில் ஈடுபட்டனர்; உரிய பலன் தரவில்லை. நுாறு அடிக்குள் இருந்த நீர்மட்டம், 400 - 1,000 அடி ஆழத்திற்கு சென்று விட்டதால், கோவை, திருப்பூர், தர்மபுரி, திருச்சி, பெரம்பலுார், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில், நிலத்தடி நீரை காண்பது, அரிதாகி விட்டது.
கிடைக்கும் நீரும், கடினத் தன்மையுடன் இருந்ததால், குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சொல்லொணாத் துயருக்கு, மக்கள் ஆளாகி வந்தனர். தொடர்ந்து, 'தினமலர்' நாளிதழில் வெளியான, 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' எனும் தாரக மந்திரத்தை, தமிழகமெங்கும் ஒலிக்க செய்ததன் விளைவாக, நீர் நிலைகளை துார் வாரும் பணியில், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். கடந்த, 2019ல் துவங்கிய தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழை காலத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெய்த கனமழை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம், ௨௦௧௮ஐ காட்டிலும் உயர்ந்து விட்டது. தமிழகத்திலுள்ள, அனைத்து அணைகள், ஏரிகள், குளங்கள் என, நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ௭௫ சதவீதத்திற்கும் மேல் நிரம்பி விட்டன. கனமழை பெய்த பலனாக, அதல பாதாளத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதை, பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார மையம் நடத்திய, மாதாந்திர ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதன்படி, 2018 நீர் மட்டத்துடன், ௨௦௧௯ஐ ஒப்பிடும் போது, தமிழக முழுவதும் சராசரியாக, 50.71 மீட்டருக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.இனி, கோடையிலும், பாசனத்திற்கும், குடிநீர் வினியோகத்திற்கும், எவ்வித பிரச்னையும் ஏற்படாது!

விதண்டாவாதம் பேசியே கட்சியை நடத்துபவர்!

ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தான் நடத்தி வரும் தினசரி பத்திரிகை வாயிலாக, திராவிடர் கழக தலைவர், வீரமணி, 'தர்பார்' செய்து கொண்டிருக்கிறார்.

அவர் கூறும் தகவல், யாரையாவது சிறுமைப்படுத்தியோ அல்லது மத்தியில் ஆட்சிபுரியும், பா.ஜ.,வை குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும்; மக்களுக்கு, எந்த பயனும் இராது. சேலத்தில் நடந்த, 'துக்ளக்' வார இதழின் பொன் விழா ஆண்டு விழாவில், நடிகர் ரஜினி கூறிய உண்மையான கருத்தை ஏற்க முடியாமல், வானத்திற்கும், பூமிக்கும் நடுவே குதித்தவர், வீரமணி. மத்திய அரசு கொண்டு வரும், ஒவ்வொரு திட்டங்களையும் எதிர்ப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தி.க.,வும், அதை நடத்தி வரும் வீரமணியும், திருந்த ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன். திருச்சி மாவட்டம், வயலுார் முருகன் கோவிலில், பங்குனி மாதத்தில், தீ மிதி விழா விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. அச்சமயம், அங்கு வந்திருந்த, திராவிட கட்சியினர், அதை பார்த்து, கேலி பேசினர்.

'தீ மிதிக்கும் பக்தர்களில் யாராவது ஒருவர், தன் கை விரலை வெட்டி முருகனுக்கு காணிக்கை கொடுப்பாரா' என, அக்கட்சியினரில் ஒருவர் கேட்டார். அவர் பேச்சுக்கு உடனடியாக ஒரு பக்தர், 'கடவுள் இல்லை எனக் கூறும், உங்களில் ஒருவர், அதேபோன்று, இங்கு செய்தால், நான், இனி கடவுளையே வணங்க மாட்டேன்' எனக் கூற, மறுபேச்சில்லாமல், அக்கூட்டம் மவுனமாகி விட்டது. அதைப் போல, விதண்டாவாதம் பேசியே கட்சியை நடத்துபவர், வீரமணி. அவரது பேச்சை எல்லாம், ஒரு பொருட்டாக எண்ணி, மக்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
13-பிப்-202012:00:45 IST Report Abuse
A.Gomathinayagam தமிழகத்தில் பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை கையூட்டு இன்றி பெற முடியாது ,அந்த ஆண்டவனே வந்தாலும் இங்கு ஊழலை ஒழிக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
13-பிப்-202009:36:08 IST Report Abuse
venkat Iyer திரு.தேவதாஸ் கூறியது போல திக தொண்டர்கள் பல இடங்களில் கடவுளை வணங்கும் சைவ குடி மக்களை தொடர்ந்து கேளி செய்து வருகின்றனர்.அதில் கடவுள் இல்லை என்று கோஷம் போடுவதுடன் பெண்களை திருமணம் என்ற சடங்கின் கீழ் வியாபாரம் செய்கிறார்கள் என்று பேசுகின்றனர். உண்மையில் இவர்கள் உணர மறந்த விஷயம் என்னவென்றால் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும்,,மற்றவர்களை மதிக்ககூடிய முகத்தோற்றம்,மற்றும் பல்வேறு விஷயங்களை தொடர்ந்து வேலை சம்பந்தமாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் நல்ல முகத்தோற்றம் இவை இருந்தால் தன்னால் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.தனக்குள் தாழ்வுமனப்பான்மையினால் மற்றவர்களை ஒப்பிட்டு பார்ப்பது தவறானது. தனது முதுகு அழுக்கை முதலில் பார்த்து துடைத்து எடுத்து எடுத்துவிட்டு பின்னர் மற்றவர்களை பேசுவது சரியாக இருக்கும்..இன்று ஒடுக்கப்பட்ட சமுகம் நல்ல குணம் மற்றும் அறிவினால் அவர் சமுகத்தினை ஆதிக்கம் செய்து வருகிறார் என்பதை திக் தொண்டர்கள் உணர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-பிப்-202006:29:22 IST Report Abuse
D.Ambujavalli அரசியலில் இவர்களின் கட்சி நுழையவில்லை திமுகவே இவர்களை அண்ட விட்டால் ஒட்டு வங்கி கோவிந்தா ஆகிவிடும் என்று ஒதுக்கியே வைத்துள்ளனர். இப்படி சம்மன் இல்லாமல் ஆஜராகி, வேண்டாத கருத்துக்களை உளறுவதும், நம்பிக்கையுடன் ஏதோ வேண்டுதல்களை செய்பவர்களை கிண்டலடிப்பதுமாக நானும் இருக்கிறேன் என்கிறார்கள். அவ்வளவுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X