சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு '

Added : பிப் 12, 2020
Advertisement
 'டவுட்' தனபாலு '

பத்திரிகை செய்தி: வழக்கமாக, நடிகர் ரஜினிகாந்த் உட்பட சினிமா நடிகர்களை, 'கூத்தாடிகள்' என விமர்சிக்கும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நேற்று முன்தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவ்வாறு கூறவில்லை. அதே நேரத்தில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், ரஜினியுடன் இணைந்து, பா.ம.க., தேர்தலை சந்திப்பது தொடர்பான கேள்விக்கும், 'இல்லை' எனக் கூறாமல், மழுப்பலாக பதில் அளித்தார்.

'டவுட்' தனபாலு: பத்திரிகை செய்தியை பார்த்தாலும், சமீப காலமாக வெளியாகும் யூகங்களை கவனித்தாலும், எப்படியாவது, தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்து விடுவது என்பதில், பா.ம.க., உறுதியாக இருப்பது தெரிகிறது. சரி, நேர்மை, நியாயம், ஆன்மிகம் என பேசும் ரஜினி, தன் கூட்டணியில், பா.ம.க.,வை சேர்ப்பாரா என்ற, 'டவுட்' எழுகிறதே!

தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்: தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாநிலமாக, தமிழகம் உள்ளது. மின்னணு ஏற்றுமதியில், இரண்டாமிடத்தில் உள்ளோம். சிறு, குறு, நடுத்தர தொழிலில், நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளோம். அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில், நான்காமிடத்தில் உள்ளோம்; அடுத்த ஆண்டு இரண்டாமிடத்திற்கு வந்து விடுவோம்.

'டவுட்' தனபாலு: தி.மு.க., -உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'தமிழகத்தில் தொழில் வளர்ச்சியே இல்லை; வேலைவாய்ப்பற்ற சுடுகாடாக விளங்குகிறது. தொழில் வாய்ப்புகள் இல்லை' என, தொடர்ந்து கூறி வருவது, இட்டுகட்டிய பொய் என்பது, உங்கள் பேச்சின் மூலம், 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. அப்போ, எதிர்க்கட்சிகள் அலறுவது, தமிழக அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்பதற்காகத் தானா?

பாபா ராம்தேவ்: யோகா, தியானம் மூலம், பயங்கரவாதம், பாலியல் பலாத்காரம், குற்ற சம்பவங்கள் என, எதுவும் இல்லாத, குற்றமற்ற இந்தியாவை எளிதில் உருவாக்க முடியும். மதம், நிறம், மொழியை கடந்து, அனைவரும் ஏற்று கொள்ளும் சிறந்த பயிற்சி யோகா. நாள்தோறும் ஒரு மணி நேரம் யோகா செய்யும் போது, வலிமை, ஆரோக்கியம் மேம்படும்.

'டவுட்' தனபாலு: இவ்வளவு சிறப்பான யோகாவை, பள்ளிகளில் பாடமாக வைக்காமல், கராத்தே, குங்பூ போன்ற பிற நாட்டு கலைகளை கற்றுக் கொடுப்பது ஏனோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், தினமும் யோகா செய்தால், நாட்டில் போலீஸ் ஸ்டேஷனே தேவையின்றி போய்விடும் போல் அல்லவா இருக்கிறது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X