இதே நாளில் அன்று

Added : பிப் 12, 2020
Advertisement
 இதே நாளில் அன்று

பிப்ரவரி 13, 1879

சரோஜினி நாயுடு: ஆந்திர மாநிலம், ஐதராபாதில், அகோர்நாத் சட்டோபாத்யாயா - - பரத சுந்தரி தம்பதிக்கு, 1879 பிப்., 13ல் பிறந்தார். 'ஐதராபாத் நிஜாம்' அறக்கட்டளையின் உதவித்தொகையில், லண்டன் கிங்ஸ் கல்லுாரி, கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லுாரிகளில், பட்டப் படிப்பு படித்தார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி மொழிகளில் புலமை பெற்றார்.

ஜாதிக் கோட்பாடுகளை உடைத்து, கோவிந்தராஜுலு நாயுடுவை, காதல் திருமணம் புரிந்தார். காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்ற அவர், சிறை சென்றார். சுதந்திர போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் என, பன்முகம் கொண்டவர்; கவிதையில் பெரும் நாட்டம் உடையவர்.

இந்தியாவின், முதல் பெண் கவர்னர் என்ற பெருமைக்கும், காங்கிரசின் முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்கும் உரியவர். அவர் பிறந்த நாளை, நம் நாட்டில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1949 மார்ச், 2ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X