சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அன்புச்செழியனுக்கு கோடிக்கணக்கில் அபராதம்?

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (2)
Advertisement
அன்புச்செழியனுக்கு கோடிக்கணக்கில் அபராதம்?

''மண்டையை உடைச்சு, ஆராய்ச்சி பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார், குப்பண்ணா.

''ஏதாவது விஞ்ஞானிகள் சம்பந்தப்பட்ட தகவலாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''முழுசா கேளும்... தமிழக அரசின் பட்ஜெட் நாளைக்கு தாக்கலாறது... அப்பறமா, துறைவாரியா மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கும் ஓய்...''இதுல, ஒவ்வொரு அமைச்சரும், அவாவா துறையில செயல்படுத்தப் போற திட்டங்களை அறிவிப்பா... ஜெயலலிதா இருந்தப்ப, அவரை, 'இம்ப்ரஸ்' பண்றதுக்காக, கூட்டுறவு துறை சார்புல, 'அம்மா மருந்தகம், அம்மா பல்பொருள் அங்காடி' போன்ற திட்டங்களை துவங்கினா ஓய்...''அடுத்த வருஷம், தேர்தல் வரப் போறதோல்லியோ... அதனால, 'கூட்டுறவு துறை அறிவிப்புகள்ல, அம்மா பெயர்ல புதிய திட்டங்களை அறிவிக்கணும்'னு துறையின் அமைச்சர் ராஜு சொல்லியிருக்கார்... அதிகாரிகளும், மண்டையை பிய்ச்சுக்காத குறையா, யோஜனை பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''சத்தம் காட்டாம வந்துட்டு, சாதுவா திரும்பி போயிட்டாருல்லா...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...''தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், சமீபத்துல நடந்துச்சுல்லா... பொதுவா, இந்தக் கோவிலுக்கு, பதவியில இருக்கிற அரசியல்வாதிகள் வந்துட்டு போனா, பதவியை இழந்துடுவாங்க அல்லது உடம்பு சரியில்லாம போயிடும்னு, 'சென்டிமென்ட்' இருக்கு வே... ''அதனால தான், கும்பாபிஷேகத்துல, முதல்வரோ, துணை முதல்வரோ கலந்துக்கலை... அதே நேரம், கைத்தறி துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியன் மட்டும் கலந்துக்கிட்டாரு வே... ''அதுவும், அமைச்சருங்கிற பந்தா, படை, பரிவாரங்களோட போனா, பெருவுடையார் கோபத்துக்கு ஆளாகிடுவோம்னு பயந்து, காவி வேட்டியில, பக்தர் மாதிரி போய், சாமி தரிசனம் பண்ணிட்டு சத்தமில்லாம திரும்பிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''இந்த முறை, கோடிக்கணக்குல போட்டு தீட்டிரணும்னு முடிவு பண்ணியிருக்காங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், அன்வர்பாய்.

''என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள், அலுவலகங்கள்ல, வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி, 65 கோடி ரூபாயை அள்ளியிருக்காங்களே... மதுரையில, அவரது நண்பர் சரவணன் வீட்டுலயே, 17 கோடி ரூபாயை எடுத்திருக்காங்க பா... ''இது போக, பல சினிமா தயாரிப்பாளர்கள், கையெழுத்து போட்டு தந்த வெற்று பத்திரங்களும் ஏராளமா சிக்கியிருக்கு... இதுக்கு முன்னாடி ஒரு முறை, இதே மாதிரி, அன்பு வீடுகள்ல, 'ரெய்டு' நடத்தினப்ப, ஆளுங்கட்சி தலையீட்டால, மேல் நடவடிக்கை நீர்த்து போயிடுச்சு பா... ''இந்த முறை, அப்படி விட்டுரக் கூடாது... கோடிக்கணக்குல அபராதத்தை போட்டு தீட்டிரணும்னு, வருமான வரித்துறை வட்டாரங்கள் முடிவு பண்ணியிருக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.

பெஞ்சில் புதியவர்கள் இடம் பிடிக்க, பெரியவர்கள் எழுந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
13-பிப்-202012:00:50 IST Report Abuse
LovelyMarees கோடிக்கணக்கா அபராதம் மட்டும் விதிச்சா போதுமா. வரி கட்டாம ஏய்ப்பு பண்ணுனா தண்டனை கிடையாதா? அபராதம் விதிச்சு தண்டனையும் கொடுங்க அப்போதான் திருந்துவான்க. என்ன சட்டமோ பணம் இருக்கிறவன்கு தக்க மாறிக்கிடுது.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-பிப்-202006:21:07 IST Report Abuse
D.Ambujavalli எலிக்குத் தான் பொறி வைக்க வேண்டும் செழியன் எல்லாக் கூண்டையும் உடைக்கும் ‘திறமை’ உள்ள சிங்கம் யாருக்கு எவ்வளவு என்று கணக்கு வழக்குள்ளவர் எதிலும் மாட்ட மாட்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X