சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Added : பிப் 12, 2020
Advertisement
 அக்கம் பக்கம்

'பரவாயில்லையே... ரொம்ப மாறிட்டாரே' என, உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத் பற்றி, ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அந்த மாநிலத்தை சேர்ந்த சக அரசியல்வாதிகள்.

ஆதித்யநாத், முதல்வராவதற்கு முன், பல ஆண்டுகள், கோரக்பூர் தொகுதியின், பா.ஜ., - எம்.பி., யாக இருந்தார். கோரக்பூர் மடத்தின் மடாதிபதியாகவும் இருந்தார். ஆனாலும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை, அவர் அதிகம் பயன்படுத்தவில்லை.

நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து அறிந்து கொள்வதிலும், அவர் ஆர்வம் காட்டுவது இல்லை. உ.பி., முதல்வராக பதவியேற்றபோது, அவரிடம் இருந்த நவீன தொழில்நுட்ப சாதனம், ஸ்மார்ட் போன் மட்டுமே. அதில் உள்ள வசதிகளையும் முழுமையாக அவர் பயன்படுத்துவது இல்லை.

ஆனால் பதவியும், காலமும் அவரை ரொம்பவே மாற்றி விட்டன. முஜாபர்பூரில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதித்யநாத், 'ஐபாட்' என்ற சாதனத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை பார்த்தே, உரையாற்றினார்.

புதிய விஷயங்களை அறிந்து கொள்ளவும், மற்றவர்களை தொடர்பு கொள்ளவும், சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார். இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு, அவர் மாறி விட்டார். 'காலம் மாறிப் போச்சு... நவீன தொலைதொடர்பு சாதனங்கள் விஷயத்தில், முதல்வரை இனி யாரும் ஏமாற்ற முடியாது' என, முணுமுணுக்கின்றனர், உ.பி., மாநில, பா.ஜ., வினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X