சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு பேட்டி அறிக்கை

Added : பிப் 12, 2020
Advertisement
பேச்சு பேட்டி அறிக்கை

'நீங்கள் கிண்டலடிக்கும் விளக்குமாறு, டில்லியில், தாமரை மற்றும் கையை, சுத்தமாக துடைத்து எறிந்து விட்டதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி:

ஆட்சி பீடத்தை, ராஜ்யலட்சுமி என்பர். டில்லியில், மீண்டும் அந்த ஆட்சி பீடத்தை, ஆம் ஆத்மி கட்சி பிடித்துள்ளது. அந்த பீடத்தில் தாமரை அமர்ந்திருந்திருந்தால், பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், மக்கள், விளக்குமாறை எடுத்து வைத்துள்ளனர்; மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.

'அவர்கள் கூட இருந்து, பல மோசடிகளில் உடந்தையான நீங்கள், வழக்குகளில் சிக்கிக் கொள்ள பயந்து, இப்போது, அ.தி.மு.க.,வில் சேர்ந்து, தாய்க்கட்சியான, சசி குடும்ப கட்சியை கண்டபடி பேசுகிறீர்கள் என, அ.தி.மு.க.,விலேயே பலர் பேசுகின்றனரே...' என, 'போட்டு'க் கொடுக்கும் வகையில், தினகரன் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்துள்ள புகழேந்தி:

மரண படுக்கையில், ஜெ., இருந்த கடைசி மூன்று நாட்களில் மட்டும், சசிகலா மற்றும் அவரது கும்பல், 1,700 கோடி ரூபாய் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இது எவ்வளவு மோசமான, கீழ்த்தரமான செயல்!

'நல்ல திட்டம் தான், மாநிலம் முழுவதும் கொண்டு வாங்க...' என, பாராட்டத் தோன்றும் வகையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பேச்சு:

தமிழகத்தில், 50 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்களில், 30 சதவீதம் பேர், நடந்தும், சைக்கிள்களிலும் செல்கின்றனர். சாலைகளில் அவர்களை பாதுகாக்கவும், எளிதாக சைக்கிள்களில் செல்வதற்கு ஏதுவாகவும், உள்கட்டமைப்பு வசதிகளுடன், 'மாபெரும் சாலைகள் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.

'அடேங்கப்பா... மாநில அரசின் மீது தான், உங்கள் கட்சிக்கு எவ்வளவு அக்கறை...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு அறிக்கை:

தமிழக அரசு, 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வருகிறது. மாநில அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டிய பல வகையான நிதிகள் வழங்கப்படாமல், மாநிலம் வஞ்சிக்கப்படுகிறது. எனவே, மாநிலத்திற்கு தேவையான நிதியை, மத்திய அரசு ஒதுக்க வேண்டும். 'கோரிக்கைகள் கூட சரி தான். அதற்கு பின், முற்றுகையிடுவோம் என, அறிவிப்பது தான், உங்கள் பக்கம் உள்ள மிகப் பெரிய குறையாக இருக்கிறது...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி: ஒரு விவசாயிக்கு, 5 லட்சம் ரூபாய் வீதம், ஐந்தாண்டுகளுக்கு, வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் இ.பி.எஸ்., வீட்டை முற்றுகையிட உள்ளோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X