சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து முன்னணி நிர்வாகியின் கார் எரிப்பு: திருப்பூரில் பஸ்கள் மீது கல்வீச்சு

Added : பிப் 12, 2020
Advertisement
 ஹிந்து முன்னணி நிர்வாகியின் கார் எரிப்பு:  திருப்பூரில் பஸ்கள் மீது கல்வீச்சு

திருப்பூர்: திருப்பூரில், ஹிந்து முன்னணி நிர்வாகியின் கார் எரிக்கப்பட்டதை கண்டித்து, சில பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மூன்று பஸ்கள், கல் வீசி தாக்கப்பட்டன.

திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர், மோகனசுந்தரம், 45; ஹிந்து முன்னணி கோட்ட செயலர்.அவர் வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்த, 'ஹோண்டா பிரீஸா' கார், நேற்று அதிகாலை, 3:30 மணியளவில், தீப்பற்றி எரிந்தது.

திருப்பூர் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், கார் எரிந்த இடத்துக்கு சென்று விசாரித்தார். ஹிந்து முன்னணி தொண்டர்கள், 500க்கும் மேற்பட்டோர், காருக்கு தீ வைத்தோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காலை, 8:00 மணிக்கு, கொங்கு மெயின் ரோட்டில், மறியலில் ஈடுபட்டனர். கமிஷனர் பேச்சு நடத்தியதை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது.கார் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கொங்கு மெயின் ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு ஆகிய பகுதிகளில், சில கடைகள் அடைக்கப்பட்டன.போயம்பாளையம், நஞ்சப்பா நகரில், இரண்டு பேக்கரிகளை, சிலர் கல் வீசி தாக்கினர். கூலிபாளையம் மற்றும் கொங்கு மெயின் ரோடு வழியே சென்ற ஒரு மினி பஸ், இரண்டு அரசு பஸ் மீது, கற்கள் வீசப்பட்டன.

வடக்கு போலீசார் கூறுகையில், 'கார் எரிந்த பகுதியில் கிடைத்த, 'சிசிடிவி' கேமரா பதிவில், இரண்டு டூ - வீலரில், நான்கு பேர் வருவதும், மோகனசுந்தரம் வீட்டின் முன், நோட்டமிடுவதும், தெரிய வந்துள்ளது.'அடுத்த சில நிமிடங்களில், நடந்து வந்து, காருக்கு தீ வைத்துள்ளனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X