மீனவர்கள் 4 பேர் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் 4 பேர் மாயம்

Added : பிப் 12, 2020
Share

மரக்காணம்: மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் கடலில், இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்று மாயமான, நான்கு மீனவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தோர் துரை, 45, கார்த்தி, 40, வில்சன், 42, செந்தமிழ், 35. இவர்கள் நான்கு பேரும், நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், இரண்டு பைபர் படகுகளில், மீன் பிடிக்க, கடலுக்குச் சென்றனர்.காலை, 10:00 மணிக்கு கரைக்கு வர வேண்டியவர்கள், நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை. தகவல் அறிந்த போலீசார், மீனவர்கள் உதவியுடன், கடலுக்குள் படகில் சென்று, அவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X