சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் மோசடி: ஈரானியர் இருவர் கைது

Added : பிப் 12, 2020
Share
Advertisement
 பணம் மோசடி: ஈரானியர் இருவர் கைது

நாகர்கோவில்: கடைகளில் பணம் மோசடி செய்ததாக, மேற்காசிய நாடான, ஈரானைச் சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே உள்ள, வெள்ளிச்சந்தையைச் சேர்ந்தவர், டேவிட். எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, நேற்று முன்தினம், காரில் வந்த இரு வெளிநாட்டினர், 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 500 ரூபாய் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.டேவிட், 500 ரூபாய் நோட்டு கொடுக்கும் போது, கவனத்தை திசை திருப்பி, இருவரும், 10 ஆயிரம் ரூபாயை திருடி சென்று விட்டனர்.இதுபோல, செல்வகுமார் என்பவரது கடையிலும், பணத்தை திருடிஉள்ளனர்.இருவரும், ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தனர்.

அவர்கள் சென்ற காரை, ஈத்தாமொழி அருகே, போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் இருந்த, ஈரான் நாட்டை சேர்ந்த மெய்சம், 42, இவரது தம்பி ரேசா, 40 ஆகியோரை, கைது செய்தனர். சுற்றுலா விசாவில் வந்து, பல இடங்களிலும், இதுபோன்ற திருட்டில் ஈடுபட்டது, விசாரணையில் தெரிய வந்தது. காரில் இருந்து, கட்டுக்கட்டாக, ஈரான் பணமும் கண்டெடுக்கப்பட்டது. இருவரும், நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X