சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளை கொன்ற பின் மகனுக்கு குறி வைத்த கொடூர தந்தை: மனைவியுடன் தகராறில் தந்தை கொடூரம்

Added : பிப் 12, 2020
Advertisement
 மகளை கொன்ற பின் மகனுக்கு குறி வைத்த கொடூர தந்தை: மனைவியுடன் தகராறில் தந்தை கொடூரம்

நாகர்கோவில்: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மகளை கொன்று, மகனை கொலை செய்ய முயற்சித்த தந்தையை, போலீசார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டம், அஞ்சு கிராமம் அருகே, மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்தவர், செந்தில்குமார், 42; மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு, ஷியாம் சுந்தர், 7 என்ற மகனும், மூன்றரை வயதில் சஞ்சனா என்ற மகளும் இருந்தனர்.மனைவியின், 1.5 சவரன் நகையை, செந்தில்குமார் அடகு வைத்திருந்தார். இதில், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மகன் அலறிஉள்ளான்.

ராமலட்சுமி சென்று பார்த்தபோது, கயிறால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.அவனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, வீட்டில் இருக்கும் மகளை பார்த்துக் கொள்ளுமாறு கூற, கணவருக்கு போன் செய்தார்.அவர் போனை எடுக்காததால், உறவினர் ஒருவரை அழைத்து, வீட்டுக்கு சென்று, மகளை பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் சென்று பார்த்த போது, சஞ்சனா தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தார்.போலீசார் விசாரணை நடத்தினர்.

அங்குள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவில், செந்தில்குமார் மகனை அழைத்துச் செல்வதும், பின் தனியாக வருவதும் பதிவாகியிருந்தது. அவரே, மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றதுடன், மகனையும் கொல்ல முயற்சித்தது தெரிந்தது. தப்பியோடிய செந்தில்குமாரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X