சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எலி மருந்து கலந்த எள்ளுருண்டை சாப்பிட்ட மாணவர்கள் சிகிச்சை

Added : பிப் 12, 2020
Advertisement

தர்மபுரி: எலி மருந்து கலந்த எள் உருண்டையை சாப்பிட்ட, மாணவர்கள், 13 பேர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவன், பேகாரஹள்ளியில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார்.இவர் நேற்று, தன் தந்தையின் இருசக்கர வாகனத்தில் இருந்த எள்ளுருண்டைகளை, பள்ளிக்கு எடுத்து சென்று உள்ளார்.அதை, தனது நண்பர்கள், 12 பேருக்கு பங்கிட்டு கொடுத்ததுடன், தானும் சாப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில், இதை சாப்பிட்ட அனைவரும், வாந்தி எடுத்து மயங்கினர்.அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மயக்கமடைந்த மாணவர்களை மீட்டு, அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.தகவலறிந்து, மருத்துவமனைக்கு வந்த மாணவனின் தந்தை, தன் விவசாய நிலத்தில் உள்ள எலிகளை அழிக்க, எலி மருந்து தடவி வைத்திருந்த எள்ளுருண்டைகளை, தெரியாமல், மகன் எடுத்து வந்தது குறித்து, டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாணவர்கள், 13 பேரும், தர்மபுரி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இது குறித்து, காரிமங்கலம் போலீசார் மற்றும் கல்வித்துறையினர் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X