கோர்ட் செய்தி

தமிழ்நாடு

காதலிக்க மறுத்த மாணவி கொலை குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

Added : பிப் 12, 2020
Advertisement

கோவை: காதலிக்க மறுத்த மாணவியை, கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை விதித்து, கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேஉள்ள சூளேஸ்வரன்பட்டி, காந்திபுரத்தில் வசித்து வருபவர், சந்திரன். இவருக்கு மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.போலீசில் புகார்இளைய மகள், சுப்ரிகா, 22, எம்.சி.ஏ., படித்து வந்தார்.

இவரை, பொள்ளாச்சி, ஜோதி நகரைச் சேர்ந்த, ராஜன் என்பவர் மகன் தங்கத்துரை, 30, ஒரு தலையாக காதலித்து வந்தார்.சுப்ரிகா வெளியே செல்லும் போது, அவரை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தினார். இதற்கு, சுப்ரிகா மறுத்து வந்தார். சுப்ரிகாவின் வீட்டுக்கு சென்று, தங்கத்துரை பெண் கேட்டுள்ளார்.அப்போது, சுப்ரியாவுக்கு, உறவுக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளதாக, அவரது தாய் செல்வி தெரிவித்தார். அதன்பின்னும், சுப்ரிகாவை தொந்தரவு செய்து வந்தார்.சுப்ரிகாவின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து, தங்கத்துரையை அழைத்து, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதற்கிடையில், 2014, நவ., 13ல், சுப்ரிகா வீட்டுக்கு சென்ற தங்கத்துரை, மீண்டும் தகராறு செய்தார். 'எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்கக் கூடாது' என கூச்சலிட்டபடி, சுப்ரியாவை கத்தியால் குத்தி, கொலை செய்தார். தடுக்க சென்ற, அவரது தாய் செல்விக்கும், கத்திக்குத்து விழுந்தது. சிகிச்சைக்கு பின், செல்வி உயிர் பிழைத்தார்.தீர்ப்புபொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து, தங்கத்துரையை கைது செய்து, கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

விசாரித்த, நீதிபதி பூர்ணஜெய ஆனந்த் நேற்று தீர்ப்பளித்தார்.கொலை முயற்சிக்கு ஏழாண்டு சிறை, அத்துமீறி வீடு புகுந்த குற்றத்துக்கு, 10 ஆண்டு சிறை, கொலை குற்றத்துக்கு ஆயுள் சிறை தண்டனை என, குற்றவாளி தங்கத்துரையை, வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X