பொது செய்தி

தமிழ்நாடு

காஸ் சிலிண்டர் விலை ரூ.147 அதிகரிப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னை: தமிழகத்தில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, திடீரென, 147 ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன.இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந் தோறும், 1ம் தேதி, சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.

இதன்படி, தமிழகத்தில், இம்மாதம், வீட்டு சிலிண்டர் விலையில் எவ்வித மாறுதலும் செய்யப்படாமல், ஜனவரியில் இருந்த, 734 ரூபாய் என்ற விலை தொடர்ந்தது. வணிக சிலிண்டர் விலை, 226.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,363 ரூபாயில் இருந்து, 1,589.50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று திடீரென, தமிழகத்தில், வீட்டு காஸ் சிலிண்டர் விலை, 147 ரூபாய் உயர்த்தப்பட்டு, 881 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த விலைக்கு சிலிண்டர் வாங்கியதும், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில், மத்திய அரசு வழங்கும் மானிய தொகையை, எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும். வீட்டு சிலிண்டர் விலை, மஹாராஷ்டிராவில், 829.50 ரூபாய்; மேற்கு வங்கத்தில், 896 ரூபாய்; டில்லியில், 858.50 ரூபாயாகவும் உள்ளது.

எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,'டில்லியில், சட்டசபை தேர்தல் நடந்ததால், சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது, தேர்தல் முடிந்ததால், சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது' என்றார். வாடிக்கையாளர்கள் குழப்பம்?நேற்று முன்தினம் வரை, வீட்டு சிலிண்டர் பதிவு செய்தவர்களின் மொபைல் போன் எண்ணிற்கு, டெலிவரியின் போது, 734 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, எண்ணெய் நிறுவனங்கள், எஸ்.எம்.எஸ்., அனுப்பி உள்ளன. நேற்று, 881 ரூபாய் செலுத்துமாறு, புதிய எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், இரண்டில், எந்த விலையை வழங்க வேண்டும் என தெரியாமல், வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X