நுண்ணீர் பாசனத்திற்கு ரூ. 1,300 கோடி வழங்க நபார்டு வங்கி ஒப்புதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசனத்திற்கு ரூ. 1,300 கோடி வழங்க நபார்டு வங்கி ஒப்புதல்

Added : பிப் 12, 2020
Share
சென்னை: தமிழகத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த, 1,300 கோடி ரூபாய் வழங்க, நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம் என்பதால், விவசாயம் நிலையற்றதாக உள்ளது. இதனால், விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். எனவே, கிடைக்கும் நீராதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி, சாகுபடி செய்ய வேண்டிய நிலை உள்ளது.இதற்காக, மத்திய - மாநில அரசுகள் இணைந்து, பிரதமரின்

சென்னை: தமிழகத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த, 1,300 கோடி ரூபாய் வழங்க, நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம் என்பதால், விவசாயம் நிலையற்றதாக உள்ளது. இதனால், விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். எனவே, கிடைக்கும் நீராதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி, சாகுபடி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இதற்காக, மத்திய - மாநில அரசுகள் இணைந்து, பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியத்திலும், நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் வழங்கப் படுகின்றன.தமிழகத்தில், இதுவரை, 4.22 லட்சம் ஏக்கரில், நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைத்து தரப்பட்டுள்ளன. மேலும், 2.47 லட்சம் ஏக்கரில், நுண்ணீர் பாசன கட்டமைப்புகளை நிறுவும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக, 45 நிறுவனங்களை அரசு நியமித்துள்ளது.இதுவரை, இத்திட்டத்திற்கு, மாநில அரசு, தன் சொந்த நிதியை வழங்கி வந்தது. இனி, மாநில அரசின் பங்களிப்பை, நபார்டு வங்கி கடனுதவியாக பெற, முடிவு செய்யப்பட்டு உள்ளது.அரசின் தீவிர முயற்சியால், இத்திட்டத்திற்கு, 1,300 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதியில், 2019 - 20; 2020 - 21ம் ஆண்டுகளில், நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பயனாளிகள் தேர்வை தீவிரப்படுத்த, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X