பொது செய்தி

தமிழ்நாடு

பிரசவத்தில் தாய், குழந்தை பலி கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

Added : பிப் 12, 2020
Share
Advertisement
சென்னை: 'பிரசவத்தின் போது, தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், கணவருக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ஆயிக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர், ராஜ். இவரது மனைவி காஞ்சனா, 23. மனித உரிமை மீறல்நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா, பிரசவத்துக்காக, விஜயமங்கலத்தில் உள்ள, ஆரம்ப

சென்னை: 'பிரசவத்தின் போது, தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், கணவருக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ஆயிக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர், ராஜ். இவரது மனைவி காஞ்சனா, 23. மனித உரிமை மீறல்நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா, பிரசவத்துக்காக, விஜயமங்கலத்தில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையத்தில், 2019ல் சேர்ந்தார். அங்கு, டாக்டர் இல்லாமல், நர்ஸ் சுகன்யா என்பவர் மட்டுமே, பிரசவம் பார்த்துள்ளார்.

அப்போது, குழந்தையின் தலை பாதி வெளியே வந்த நிலையில், அசைவின்றி நின்று விட்டது. இதனால், அருகில் உள்ள, திங்களூர் சுகாதார நிலையத்துக்கு, காஞ்சனாவை கொண்டு சென்றனர். அங்கும் டாக்டர்கள் இல்லாமல், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தையும், தாயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்த நிலையில், காஞ்சனாவின் கணவர் ராஜும் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:அரசு மருத்துவமனையில் உரிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததுடன், டாக்டர்களும் பணியில் இல்லாததால், இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு, மனித உரிமை மீறல் நடந்துள்ளது. தகவல் பலகைஎனவே, பாதிக்கப்பட்ட மனுதாரர் ராஜுக்கு, 10 லட்சம் ரூபாயை, தமிழக அரசு, நான்கு வாரங்களில் இழப்பீடாக வழங்க வேண்டும். அதில், பணியில் இல்லாத டாக்டர் விஜயலட்சுமி என்பவரிடம், 5 லட்சம் ரூபாய் வசூலித்து கொள்ளலாம். டாக்டர் விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுப்பதுடன், முறையாக பணிபுரியாத, நான்கு மருத்துவ அலுவலர்கள் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் பிரசவம் பார்க்க, பணியில் டாக்டர்கள் இருப்பதுடன், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில், பணியில் இருக்கும் டாக்டரின் மொபைல் போன் அல்லது தொலைபேசி எண்களை, பொது மக்கள் பார்க்கும் வகையில், மருத்துவமனை தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X