கமல் சொன்னது என்ன?: ஜெயகுமார் புது விளக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் சொன்னது என்ன?: ஜெயகுமார் புது விளக்கம்

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
 கமல் சொன்னது என்ன?:  ஜெயகுமார் புது விளக்கம்

சென்னை: ''டில்லி வழியை பின்பற்றி, 2021ம் ஆண்டிலும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும் என்பதை தான், நடிகர் கமல் மறைமுகமாக கூறியுள்ளார்,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலையில், எங்களுக்கு முழு உடன்பாடு உண்டு. தி.மு.க., போல் இரட்டை வேடம் போடவில்லை. தி.மு.க., ஆட்சியில், நளினி தவிர, வேறு யாரையும் விடுதலை செய்ய வேண்டாம் என, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினர்.ஒவ்வொரு கட்சியும், ஆட்சிக்கு வரவே விரும்பும். அதன் அடிப்படையில், தே.மு.தி.க., தலைமை பேசிஉள்ளது. இதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் கிடையாது; கூட்டணியில், எந்த பிணக்கும் இல்லை. ரஜினி, கட்சி ஆரம்பிக்கட்டும். அதன்பின், தன் கருத்தை கூறுவதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறிஉள்ளார்.

ஒவ்வொரு கட்சிக்கும், ஆசை இருக்கும். கனவு காண்பதை, யாரும் தடுக்க முடியாது. மீண்டும், 2021ல், தமிழகத்தில், ஜெ., ஆட்சி அமையும் என்பதை தான், நடிகர் கமல், 'டில்லி வழியில் தமிழகம்' என, கூறியுள்ளார்.வரும், 2021ல், டில்லி வழியை பின்பற்றி, மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும் என, அவர் கூறியுள்ளார்.அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு வழக்கில், 41 பேர் கைது செய்யப்பட்டு உள் ளனர். சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் உள்ள விஷயத்தை கூற முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X