அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மத்திய அரசு தான் அறிவிக்க முடியும்': ஸ்டாலின்

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
 'மத்திய அரசு தான் அறிவிக்க முடியும்': ஸ்டாலின்

சென்னை: ''காவிரி வேளாண் மண்டலத்தை, மத்திய அரசு தான் அறிவிக்க முடியும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சென்னையை அடுத்த, மதுரவாயல் தெற்கு பகுதி, தி.மு.க., செயலர் கணபதி இல்ல திருமண விழாவில், ஸ்டாலின் பேசியதாவது:காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்பு, மக்களுக்கு வரப்பிரசாதம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால், இந்த அறிவிப்பை, மத்திய அரசு தானே வெளியிட முடியும்!முதல்வர் இ.பி.எஸ்., இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதா என, கேட்க விரும்புகிறேன். காவிரி டெல்டா மாவட்டங்களில் நடந்து வரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் நிலை என்ன; தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை மூட, மத்திய அரசு அனுமதி தந்து விட்டதா?காவிரி டெல்டா மாவட்டங்களை, வேளாண் மண்டலமாக அறிவிக்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
16-பிப்-202012:40:58 IST Report Abuse
madhavan rajan இதெல்லாம் விவரமாக தெரிந்த இவர் கட்சி எம் பி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலை சுங்க கட்டண பூத்தை நீக்க மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைத்தாரே. அவருக்கு சரியாக சொல்லித்தரவில்லையா?
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
13-பிப்-202016:30:50 IST Report Abuse
K.ANBARASAN துண்டு சீட்டு இன்னும் கைக்கு வரலையா - சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு இருக்கியே.
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
13-பிப்-202016:29:49 IST Report Abuse
K.ANBARASAN சரி விட்டுடுங்கப்பா ரொம்ப அழுவுறார். -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X