லஞ்ச ஊழல் வழக்கில் மெத்தனம் சி.பி.ஐ., நீதிமன்றம் அதிருப்தி

Added : பிப் 12, 2020
Advertisement

புதுடில்லி: சி.பி.ஐ., முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கில், சி.பி.ஐ., அக்கறை காட்டாதது குறித்து, சி.பி.ஐ., நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மாமிச ஏற்றுமதியாளர் மொய்ன் குரேஷியை ஒரு வழக்கில் இருந்து விடுவிக்க, ராகேஷ் அஸ்தானா 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, ஐதராபாதைச் சேர்ந்த, தொழில்அதிபர் சதிஷ் சானா புகார் தெரிவித்திருந்தார். இந்த லஞ்சப் பணம், துபாயைச் சேர்ந்த தொழில்அதிபரும், இடைத்தரகருமான, மனோஜ் பிரசாத் மூலம், கைமாறியதாக அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து, ராகேஷ் அஸ்தானா, சி.பி.ஐ., துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் வெளிவந்தார். துபாயில் இருந்து இந்தியா வந்தபோது, மனோஜ் பிரசாத், அவர் சகோதரர் சோமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், சி.பி.ஐ., 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதால், அவர்களும் ஜாமினில் வெளிவந்து விட்டனர். இந்நிலையில் நேற்று இவ்வழக்கு, டில்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில், நீதிபதி சஞ்சீவ் அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சி.பி.ஐ., ஒருபுறம், அதன் துணை கண்காணிப்பாளரையே கைது செய்கிறது.

மறுபுறம், லஞ்ச ஊழல் வழக்கில், முக்கிய பங்கு வகித்த சிலரை, ஜாமினில் சுதந்திரமாக நடமாட விடுகிறது. ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது என தெரியவில்லை. இவ்வழக்கு விசாரணை, 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 'ராகேஷ் அஸ்தானா, தேவேந்திர குமார், 'ரா' பிரிவு தலைவர் எஸ்.கே.கோயல் ஆகியோர் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் ஏதுமில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X