பொது செய்தி

இந்தியா

இந்திய பயணத்தை எதிர்நோக்கும் டிரம்ப்; சிறப்பாக வரவேற்க மோடி ஏற்பாடு

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (5+ 31)
Advertisement
Modi,Trump,DonaldTrump,India,US,US_president,டிரம்ப்,மோடி,இந்தியா,வருகை

புதுடில்லி: “இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு, மறக்க முடியாத வரவேற்பு வழங்கப்படும்,” என, பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கிடையே, இந்திய பயணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, வரும், 24 - 25ம் தேதிகளில், இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். ஆமதாபாத் நகருக்கு, 24ம் தேதி வரும் டிரம்ப், பிரதமர் மோடியுடன், பிரமாண்ட ஊர்வலத்தில் பங்கேற்கிறார். ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, சபர்மதி ஆசிரமம் வரை நடைபெறும் அந்த பேரணியில், லட்சக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் கூடி, அமெரிக்க அதிபரை வரவேற்க உள்ளனர்.


உறுதி:

சபர்மதி ஆசிரமத்தில், மஹாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் டிரம்ப், அதையடுத்து, மோடேரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லப பாய் படேல் மைதானத்தை, மோடியுடன் இணைந்து திறந்து வைக்க உள்ளார். அங்கு, மக்கள் மத்தியில் இருவரும் உரையாற்ற உள்ளனர். இதை, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த விழாவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த, 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில், 50 ஆயிரம் இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் டிரம்பும், மோடியும் உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் வருகையை முன்னிட்டு, ஆமதாபாத் நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


ஒப்பந்தம்:

இந்நிலையில், இந்திய பயணம் குறித்து டிரம்ப் கூறியதாவது: நரேந்திர மோடி ஒரு சிறந்த மனிதர். இந்தியாவுக்கு செல்ல நான் ஆவலாக உள்ளேன். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். இரு தரப்புக்கும் சரியாக வந்தால், இந்த பயணத்தில் ஒப்பந்தம் செய்யப்படும். பிரதமர் மோடியுடன், நான் தொலைபேசியில் உரையாடினேன்.

ஆமதாபாதில் என்னை லட்சக்கணக்கான மக்கள் வரவேற்க உள்ளதாக, மோடி தெரிவித்தார். நான் உரையாற்ற இருக்கும் மைதானம், உலகின் மிகப்பெரிய மைதானமாகும். புதிதாக கட்டப்பட்டு வரும் அந்த மைதானத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் வருகை குறித்து, பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பும், அவரது மனைவியும், இந்தியாவுக்கு வரஉள்ளனர். இது, என்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நம் மதிப்புமிக்க விருந்தினருக்கு, மறக்கமுடியாத வரவேற்பை இந்தியா வழங்கும்.

மிகவும் சிறப்புவாய்ந்த இந்த பயணம், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை, மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும். இந்த வலுவான நட்புக் கூட்டணியால், இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் பயனடையும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-202007:51:03 IST Report Abuse
தமிழ் இதைவைத்தே கொஞ்சநாளைக்கு காலத்தை ஓட்டவேண்டியது தான்.
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-202007:50:14 IST Report Abuse
ஆப்பு சீனாக்காரனை நம்புறதுக்கு அமெரிக்காவை நம்பலாம்.
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-202006:05:03 IST Report Abuse
ஆப்பு நல்ல வேளை... தமிழகமும், மகாபலிபுரமும் பிழைத்தது. ஆனா, திருக்குறள், புறநானூறு இவை இன்னும் என்ன பாடு படப் போகுதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X