சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

Added : பிப் 12, 2020
Advertisement

பொள்ளாச்சி : நெகமம் பேரூராட்சியில், உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நெகமம் பேரூராட்சியில், பெரும்பாலான வீடுகளில் உள்ளூர் ஆழ்குழாய் நீரும், அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளன.சில மாதங்களுக்கு முன், மக்களும், ஆளுங்கட்சியினரும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதால், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம், வீட்டு வரி உயர்வை மட்டும் ரத்து செய்து, ஏற்கனவே நடைமுறையில் இருந்த வரியை தொடர்ந்து செலுத்த அறிவுறுத்தியது.இச்சூழலில், உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, பேரூராட்சிகளின் உதவி இயக்குனரிடம், மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதில், 865 ரூபாயாக இருந்த குடிநீருக்கான ஆண்டு கட்டணம், 1,865 ரூபாயாக உயர்த்தப்பட்டது. வீட்டு வரியை குறைத்தது போல, குடிநீர் கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X