பொது செய்தி

தமிழ்நாடு

துாக்கி அடிக்கும் ரோடு சீரமைப்பதால் நிம்மதி

Added : பிப் 12, 2020
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - கோவை ரோட்டில், அண்ணா நகர் மேடு முதல் ஆச்சிபட்டி வரையிலான மூன்று கி.மீ., தொலைவு கடந்த, 2016ல் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.

அப்போது, ஆறு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டும், ரோடு தரமாக அமைக்கப்படவில்லை என்றகுற்றச்சாட்டு எழுந்தது.லட்சக்கணக்கான வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வரும் தேசிய நெடுஞ்சாலையில், ஆபத்தான வளைவுகளில் ரோடு மேடு பள்ளமாக அமைக்கப்பட்டது. இதனால், வளைவுகளில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. சேரன் நகர் வளைவில், ரோடானது மேடு பள்ளமாக இருப்பதாலும், ரோட்டில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதாலும், வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. இரு ஆண்டுக்கு முன், பஸ், லாரி மோதி விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் இறந்தனர்.

வடக்கிபாளையம் ரோடு திருப்பதில், வேகத்தடை அமைத்தும், தினமும் வாகன விபத்து ஏற்படுகிறது. ரோடும் உரிய பராமரிப்பின்றி பல இடங்களில் சிதைந்து, குண்டும், குழியுமாக மாறி வாகன ஓட்டுனர்களை பாடாய் படுத்தி வருகிறது. ஒரு ஆண்டுக்கும் மேல் இந்நிலை நீடிக்கிறது.இந்நிலையில், ரோட்டை 'பேட்ச் ஒர்க்' செய்து சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையினர், இந்த பணியுடன் சேர்த்து, சேரன் நகர் வளைவு உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை துாக்கி அடிக்கும் வகையில் மேடு பள்ளமான ரோட்டை, சமமாக சீரமைக்க வேண்டும்.

ரோட்டோரத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காய்ந்து தொங்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.ரோட்டில், 'யு டேர்ன்' பகுதிகளில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு அமைக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X