பொது செய்தி

இந்தியா

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல்; தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாயம்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (2)
Advertisement
Assam,NRC,NRC_data,disappears,Cloud,HomeMinistry,Technical_issue

புதுடில்லி: 'அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் பாதுகாப்பாக இருப்பதாகவும், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இணையதளத்தில் இருந்து மாயமானதாகவும், விரைவில் கோளாறு சரி செய்யப்படும்' எனவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நிராகரிப்பு சான்றிதழ்:

வட கிழக்கு மாநிலமான அசாமில், தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல், கடந்த ஆண்டு ஆகஸ்ட், 31ல் வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள, 3.30 கோடி பேரில், 3.11 கோடி பேரின் பெயர்கள் பட்டியலில் இடம் பிடித்தன. 19 லட்சம் பெயர்கள், விலக்கப்பட்டன. இந்த இறுதிப் பட்டியல், www.nrcassam.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்கு, இன்னும் நிராகரிப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மத்திய அரசின் இணையதளத்தில் இருந்து, அசாம் மக்களின் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல், இரு தினங்களுக்கு முன் மாயமானது. இதனால், மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இணையதளத்தில் இருந்து பட்டியல் மாயமானதாகவும், இன்னும் சில தினங்களில் கோளாறு சரி செய்யப்படும்' எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிதேஷ் தேவ் சர்மா கூறியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல், 'விப்ரோ' நிறுவனத்தின் மூலம், இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்தநிறுவனத்தின் ஒப்பந்தம், கடந்த ஆண்டு, அக்டோபர், 19ம் தேதியுடன் முடிவுற்றது.


கடிதம்:

இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க, முந்தைய ஒருங்கிணைப்பாளர் தவறிவிட்டார். எனவே, அந்தப் பட்டியல் கடந்த ஆண்டு, டிசம்பர், 15 லிருந்தே, 'ஆப்லைன்' நிலைக்கு வந்து விட்டது. இது குறித்து, 'விப்ரோ' நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இன்னும், 23 நாட்களில், முழுமையான இறுதிப்பட்டியலை, இணையதளத்தில் மீண்டும் காண முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-பிப்-202014:17:28 IST Report Abuse
ஆரூர் ரங் மென்பொருள் கொடுத்த விப்ரோ உரிமையாளர் அஸீம் ஒரு இஸ்லாமியர் .அதற்க்காக குற்றம்சாட்டவேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
13-பிப்-202005:49:59 IST Report Abuse
blocked user ஒரு ஒப்பந்தத்தை கூட சரியாக போடமுடியவில்லையா? வெட்கம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X