பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை ஏலம்: கிலோ ரூ.105க்கு விற்பனை

Added : பிப் 12, 2020
Advertisement

பொள்ளாச்சி : ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம், விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மணிவாசகம் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது.

மொத்தம், 511 கொப்பரை மூட்டைகளை, 88 விவசாயிகள் கொண்டு வந்தனர். பத்து வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் கொப்பரை கிலோவுக்கு, ஒரு ரூபாயும், 109 மூட்டைகள் வரத்தும் குறைந்தது.* பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கொப்பரை ஏலம் நடந்தது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். விவசாயிகள், 18 மூட்டைகளில் கொப்பரை கொண்டு வந்தனர். ஏலத்தில், முதல்தர கொப்பரை, 9 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோ, 90.10 முதல், 100.50 ரூபாய்க்கு விற்பனையானது.

இரண்டாம் தர கொப்பரை, 9 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோ, 45.50 முதல், 62.50 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.ஏலத்தில், 10 விவசாயிகள், நான்கு வியாபாரிகள் பங்கேற்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கிலோவுக்கு, 40 பைசா விலை உயர்ந்து.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X