இந்தியாவிற்கு ஆயுதம் கடத்தல் 2 பயங்கரவாதிகளுக்கு, 'வாரன்ட்'

Added : பிப் 12, 2020
Advertisement

புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள், ஆளில்லா விமானங்கள் மூலம், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் போட்ட வழக்கில், காலிஸ்தான் ஜிந்தாபாத் அமைப்பைச் சேர்ந்த இருவருக்கு, ஜாமினில் வரமுடியாத, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பதிவுஇது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த செப்டம்பரில், ஆயுதங்கள், வெடிமருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை, பாகிஸ்தானில் இருந்து, ஆளில்லா விமானங்கள் மூலம் பஞ்சாபின் சோலா சாஹிப் பகுதியில் போடப்பட்டன.

இதற்காக, பாகிஸ்தானைச் சேர்ந்த, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை என்ற, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பாகிஸ்தானில் வசிக்கும், ஜம்முவின், ஆர்.எஸ்.புராவைச் சேர்ந்த ரஞ்சித் சிங் நீதா மற்றும் ஜெர்மனியில் வசிக்கும், பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குர்மீத் சிங் ஆகியோர், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர்.

சட்டவிரோதம்

இவர்கள் இருவரும், பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற, சட்டவிரோதமாக ஆயுதங்கள், வெடிமருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். இதற்காக, பஞ் சாபைச் சேர்ந்த சிலரை நியமித்து உள்ளனர்.எனவே, இந்த வழக்கில் அவர்களுக்கு எதிராக, தேசிய புலனாய்வு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், ஜாமின் பெற முடியாத வாரன்ட் பிறப்பித்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X