பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழு பெண்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி

Added : பிப் 12, 2020
Share
Advertisement
உடுமலை : உடுமலை, போடிபட்டியில், மகளிர் குழு பெண்களுக்கு, ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு நடந்தது. கிராமங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மற்றும் தொழில் முனையும் ஆர்வமுள்ளவர்களுக்கு, பயிற்சி அளிப்பது, வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்பு, தொழில் முனைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு, திருப்பூர் மாவட்டத்தில், ஊரக

உடுமலை : உடுமலை, போடிபட்டியில், மகளிர் குழு பெண்களுக்கு, ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு நடந்தது.

கிராமங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மற்றும் தொழில் முனையும் ஆர்வமுள்ளவர்களுக்கு, பயிற்சி அளிப்பது, வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்பு, தொழில் முனைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு, திருப்பூர் மாவட்டத்தில், ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டது.இத்திட்டம், திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களில் மட்டுமே முதற்கட்டமாக துவக்கப்பட்டுள்ளது. இதில் உடுமலையும் ஒன்றாக உள்ளது.மகளிர் குழுக்கள் மட்டுமின்றி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, பராமரிப்புகளை அடுத்தகட்டத்துக்கு மேம்படுத்த கடனுதவி வழங்குவதும், தொழில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்கான திட்டமாக, ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது.

சுயஉதவி குழுவினருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துதல், தொழில் முனைவோருக்கு நிறுவனங்கள் அமைப்பது, கைவினைப் பொருட்கள் தயாரித்து, அதனை சந்தைப்படுத்து வதற்கான உதவிகளும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.முதற்கட்டமாக, உடுமலை ஒன்றியத்தில் குறிப்பிட்ட ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிகள், இரண்டு நாட்கள் போடிபட்டி மற்றும் ராகல்பாவி ஊராட்சிகளில் நடந்தது.

ரெட்டிபாளையம், குருவப்பநாயக்கனுார், போடிபட்டி, தீபாலபட்டி, மொடக்குபட்டி, பள்ளபாளையம், தும்பலப்பட்டி, ஜல்லிபட்டி, வடபூதிநத்தம், ஆலாம்பாளையம், ஜே.என்.பாளையம் ஊராட்சிகளில், மொத்தமாக, 49 பயனாளிகளுக்கு போடிபட்டி ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் நடந்தது.பூலாங்கிணர், அந்தியூர், கணபதிபாளையம், ராகல்பாவி, பெரியபாப்பனுாத்து, ஆர்.வேலுார், தின்னப்பட்டி புங்கமுத்துார் ஊராட்சிகளில், தேர்வு செய்யப்பட்ட 34 பயனாளிகளுக்கு ராகல்பாவி கிராம வறுகை ஒழிப்பு சங்க அலுவலகத்திலும் நடந்தது.

போடிபட்டியில் நடந்த பயிற்சி வகுப்பில், பயனாளிகளுக்கு திட்டம் குறித்து புத்தாக்க திட்ட பயிற்றுனர்கள், விளக்கமளித்தனர். அனைவருக்கும், திட்ட செயல்பாடுகள் குறித்த கையேடு வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X