சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

நானும் விவசாயி தான்!

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (5)
Advertisement
 நானும் விவசாயி தான்!

விவசாயம் குறித்து, தமிழக காங்., தலைவர் அழகிரி: கடலுார் மாவட்டம், சிதம்பரம் தாலுகா, கீரப்பாளையம் அடுத்த திருப்பணி நத்தம் தான் சொந்த ஊர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எங்கள் பகுதியில், நெல், கரும்பு தான் முக்கிய பயிர். கிராமங்களில், வீட்டைச் சுற்றி தான் வயல்கள் உள்ளன.

காங்., கட்சியின் தொண்டனாக, அரசியல் வாழ்க்கையை துவங்கிய நான், ஆரம்ப காலத்தில், விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அதற்கு அங்கீகாரமாக, காங்., விவசாய அணிபிரிவின் செயலராக நியமிக்கப்பட்டேன்.நம் நாட்டில், பல கோடி ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைத்தால், நாட்டின் உணவு தானிய உற்பத்தி, இப்போது இருக்கும் அளவை விட, இரு மடங்காக உயர்ந்து விடும்.மானாவாரி நிலங்களில், விளைச்சலை பெருக்கினால், உலகுக்கே நாம் உணவளிக்க முடியும்.

கனடா நாட்டில், 24 ஏக்கர் நிலத்தில், 20 டன் பருப்பு விளைகிறது. ஆனால், நம் நாட்டில் அவ்வாறு விளைவதில்லை.அமெரிக்கா, கனடா, சீனா போன்ற நாடுகள், விவசாய விளைபொருள் உற்பத்தியில், நம்மை விட முன்னணியில் இருக்கின்றன. அதற்கு காரணம், தரமான வேளாண் பல்கலைக்கழகங்கள் தான்.விவசாயம் செய்யும் விவசாயிக்கு, ஏதேனும் இடர்ப்பாடு ஏற்பட்டு, விவசாயம் பழுதானால், போதிய இழப்பீடு கிடைப்பதில்லை.பயிர் பாதிக்கப்படாத காலங்களில், விவசாயிகள் செலுத்தும் பல கோடி ரூபாய் காப்பீடு பிரிமியத் தொகை, தனியார் நிறுவனங்களுக்கு சென்று விடுகிறது.

இந்நிலை மாற வேண்டும்.அறுவடை காலங்களில், அம்பாரம் அம்பாரமாக, நெல் மூட்டைகள், திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுகின்றன. மழை பெய்யும் போது, முளைத்து வீணாகி விடுகின்றன. அதுபோல, அறுவடையான நெல்லை, அப்படியே சேமிப்பதால், ஈரப்பதத்தால் வீணாகி விடுகின்றன. இதைத் தவிர்க்க, அமெரிக்காவில் இருப்பது போல, சேமிப்பு கிடங்குகளில், தானியங்களை உலர வைக்கும் இயந்திரங்களில் உலர வைத்து, சேமிப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும்.

இயற்கை விவசாயத்தை பின்பற்றி, இந்திய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து விட முடியுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இயற்கை விவசாயிகளுக்கு, இரண்டு மடங்கு மானியம் கொடுத்தால் தான்,சரியாக இருக்கும்.பெரிய அளவில் விவசாயம் செய்பவர்கள், கொஞ்ச நிலத்திலாவது இயற்கைவிவசாயம் செய்ய வேண்டும்.விவசாயிகளின் நிலை மேம்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் வருமானம், பிற துறைகளில் கிடைக்கும் வருமான அளவுக்கு இல்லை. அதை சரி செய்தாலே, விவசாயம் மேலும் வளரும்!

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-பிப்-202020:14:12 IST Report Abuse
skv srinivasankrishnaveni நம்ம நாட்டுலே இப்போது (முக்கியமா தமிழ்நாட்டுலே) முக்கிய உற்பத்தியே சாராயம் தான் மெயின் வருமானம் அரசுக்கு பிரேம் டாஸ்மாக்கிலேந்துதான் இளைஞர்களுக்கு உணவு என்றால் பீட்ஸா பர்கர் போன்ற கண்றாவிகளே கண்டதையும் துண்ணுவாங்க குடிப்பாங்க வியாதிகளால் அவஸ்தைப்படுவாங்க முதியவர்களும் 80%தண்ணீகேஸுங்க பணக்காரங்க பாரின் தண்ணீ அடிப்பானுக ஏழைகள் டாஸ்மாக் நீரை குடிச்சுபோண்டாட்டிப்பிள்ளைகளை அடிச்சுகொலையும் செய்றானுக வாழ்க்கை தொக்கி=த்தபலபொண்ணுகள் பலர் வீடுகளில் வேலைகள் செய்து பஞ்சம்பிழைக்குறாங்க காடுகளனிக்கும் வேலைக்குப்பிறங்க கிராமங்களில் தமிழ்நாட்டுலே இந்த நிலை இந்தியாமுழுக்க எப்படின்னு தெரியலே தெரியாமல் சொல்லக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
14-பிப்-202017:33:22 IST Report Abuse
Girija அப்படியா ? புதுசா இருக்கே ? ஒரு மூட்டை நெல்லை அரைச்சா எத்தன மூட்டை அரிசி கிடைக்கும் கல்லூரி முதலாளீ?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-பிப்-202016:55:20 IST Report Abuse
Endrum Indian நானும் சரத் பவர் பொண்ணு மாதிரி ஒரு விவசாயி தான் வெறும் 13 ஏக்கரில் அவர் ரூ 42 கோடி ஈட்டுகிறார் வருடா வருடம் அதுவும் ஒவ்வொரு வருடமும் அது மேலும் மேலும் உயர்கின்றது. இதுவும் விவசாயி தான் ஆனா என்ன வெறும் சில கோடிகள் தான் பண்ண முடியுது????ஒரு நாள் ஒரே ஒரு நாள் வருடத்தில் அந்த விவசாய மண்ணை மிதித்திருப்பாரா வயலில் நாற்று நட்டிருப்பாரா???ஒரு மண்ணும் கிடையாது??வெறும் மேடைக்கு மேடை உளறல் பேச்சு??இதெல்லாம் விவசாயின்னா விவசாயிகளையும் விவசாயத்தையும் மிக மிக கேவலப்படுத்துவது போல இருக்கின்றது???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X