சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புலியை காணோம்; கூண்டு அகற்றம்!

Added : பிப் 12, 2020
Advertisement

ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை பகுதியில், புலியை பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறையினர் கைவிட்டனர்.

பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை ஆயிரங்கால் பீட் பகுதியில், சங்கரன் என்பவரது தோட்டத்திலுள்ள மாட்டு தொழுவத்தில் கடந்த, 28ம் தேதி, புலி புகுந்து, ஒரு கன்றுக்குட்டி, ஐந்து வெள்ளாடுகளை கொன்று தின்றது. காவலாளி சப்தம் போட்டதை தொடர்ந்து புலி அங்கிருந்து தப்பியோடியது.இதையடுத்து, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, புலியை பிடிக்க கடந்த, 31ம் தேதி கூண்டு வைத்தனர்.இரண்டு நாட்கள் தொழுவத்துக்கு வந்த புலி, அதன்பின் அப்பகுதிக்கு வராமல் இருந்தது.

இதையடுத்து, வனத்துறையினர் கூண்டை இடம் மாற்றினர். இந்நிலையில், புலி வராததால், அதை பிடிக்கும் நடவடிக்கையை கைவிட்டு, நேற்று முன்தினம் கூண்டு அகற்றப்பட்டது. வனச்சரக அலுவலர் காசிலிங்கம் கூறுகையில், ''ஆடுகளை சாப்பிட்டுச் சென்ற பின் இரண்டு நாட்களுக்கு புலி அப்பகுதிக்கு வந்தது. அதன்பின், புலி நடமாட்டம் இல்லை. கூண்டு இடமாற்றம் செய்தும் புலி வரவில்லை.

வனத்தையொட்டிய பகுதியில் இருந்து வனத்தினுள் சென்றிருக்கும்.இதனால், புலியை பிடிக்கும் திட்டம் கைவிடப்பட்டு, கூண்டு அகற்றப்பட்டது. பணியாளர் மூலம் புலி நடமாட்டம் இருக்கிறதா என, கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X