சுற்றுலா மேம்பாட்டு பணிகள் வால்பாறையில் வசதி பெருகும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா மேம்பாட்டு பணிகள் வால்பாறையில் வசதி பெருகும்

Added : பிப் 12, 2020
Share

வால்பாறை : கோவை மாவட்டத்தில் சுற்றுலாமேம்பாட்டு திட்டத்தில், ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சிப் பணியில் வால்பாறை இடம் பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தி, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குறிப்பாக, 'ஒன் டே டூர்', கல்வி சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா போன்ற பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் முக்கியமான சுற்றுலா பகுதிகளை ஒருங்கிணைந்து, சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில், வால்பாறை, ஆழியாறு, ஆனைமலை, பேரூர், மருதமலை ஆகிய ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் வால்பாறையும் இடம் பெற்றுள்ளதால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை, ஆழியாறு, ஆனைமலை பகுதிகள், 'ஒன் டே டூர்' சுற்றுலா திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில், சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையில் தமிழக சுற்றுலாத்துறை தீவிரம் காட்டி வருகிறது, என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X