16ம் தேதி 3வது முறையாக டில்லி முதல்வராக பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
டில்லி சட்டசபை தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, வரும், 16ல், ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், டில்லி முதல்வராக. மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்.டில்லி சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில், மொத்தமுள்ள, 70 தொகுதி களில், 62 தொகுதிகளை, ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. இந்த மாபெரும் வெற்றியை அடுத்து, புதிய ஆட்சி அமைக்கும்
AAP,AamAadmiParty,ArvindKejriwal,Kejriwal,Delhi_CM,Delhi,CM,கெஜ்ரிவால்,டில்லி,முதல்வர்,பதவியேற்பு

டில்லி சட்டசபை தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, வரும், 16ல், ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், டில்லி முதல்வராக. மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்.

டில்லி சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில், மொத்தமுள்ள, 70 தொகுதி களில், 62 தொகுதிகளை, ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. இந்த மாபெரும் வெற்றியை அடுத்து, புதிய ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. டில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ளஅரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சட்டசபை தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கவர்னருடன் சந்திப்பு:

இதைத் தொடர்ந்து, அவர், டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்தித்துப் பேசினார். 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது மற்றும் புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொள்ளும் விழா உள்ளிட்டவை குறித்து, ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், ஜனாதிபதியின் முறையான உத்தரவு வெளியான பிறகே, அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்சியமைக்க உரிமை கோரி, இன்னொரு முறை, துணை நிலை கவர்னரை சந்திப்பார் என, ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

'பதவி ஏற்பு விழாவை, நாளை வைத்துக் கொள்ள வேண்டும்' என, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரும்பினர். ஆனால், புதிய அமைச்சரவையில் யார் யாரை சேர்ப்பது மற்றும் தேசிய அளவிலான முக்கிய தலைவர்களை பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக, சற்று கால அவகாசம் வேண்டுமென கருதப்பட்டது. இதையடுத்து, வரும், 16ம் தேதி ஞாயிறு அன்று, பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


நிஜமான தேசியம்:

இது குறித்து, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா கூறியதாவது:கடந்த, ஐந்து ஆண்டு கால ஆட்சிக்கு கிடைத்த வெகுமதி தான், இந்த வெற்றி. பொதுமக்களுக்கு குடிநீரும், ஏழைகளுக்கு கல்வியும் வழங்குவது தான் நிஜமான தேசியம். அதைத்தான் இந்த தேர்தல், தீர்ப்பாக தந்துள்ளது. ஞாயிறு காலை, 10:00 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதே நாளில், முதல்வரோடு சேர்ந்து, அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்வர். இவ்வாறு, அவர் கூறினார்.

ஏற்கனவே நடைபெற்றது போல அல்லாமல், இம்முறை, பதவி ஏற்பு விழாவை, மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்படுள்ளது.அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த இரு முறையும் பதவி ஏற்றுக் கொண்ட அதே ராம்லீலா மைதானம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஆம் ஆத்மியின் இளம் தலைவர்களான அதிஷி, ராகவ் சந்தா, திலிப் பாண்டே ஆகிய புது முகங்களும், இம்முறை அமைச்சரவையில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி ஏற்பு விழாவுக்கு, அகில இந்திய அளவிலான முக்கிய தலைவர்கள் அழைக்கப்படுவர் என தெரிகிறது. குறிப்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொலைபேசியில் பேசினார். அப்போதே, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். தவிர, தன்னுடன் பேசிய ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரன், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரையும், கெஜ்ரிவால் அழைக்க திட்டமிட்டுள்ளதாக, ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


பிரணாப் மகள் சிதம்பரத்துக்கு பதில்:

டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்றதை வரவேற்கும் விதமாக, காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கருத்து தெரிவித்து இருந்தார்.

இது குறித்து, காங்., மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்டா முகர்ஜி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பா.ஜ.,வை தேர்தலில் தோற்கடிக்கும் பணியை, மற்ற மாநில கட்சிகளிடம், காங்கிரஸ் வழங்கிவிட்டதா... இல்லையெனில், நம் தோல்வி யைப் பற்றி கவலைப்படாமல், ஆம் ஆத்மியின் வெற்றியை ஏன் கொண்டாடுகிறீர்கள். இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.


காங்., மூத்த தலைவர் சாக்கோ ராஜினாமா:

டில்லி சட்டசபை தேர்தலில், காங்., படுதோல்வி அடைந்ததை அடுத்து, டில்லி காங்., தலைவர் சுபாஷ் சோப்ரா, தன் தலைவர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்நிலையில், காங்., மூத்த தலைவரும், டில்லி காங்., பொறுப்பாளருமான பி.சி.சாக்கோ, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மறைந்த ஷீலா தீட்ஷித், டில்லி முதல்வராக, 2013ல் பதவி வகித்தபோது, காங்கிரஸ் சரிவை சந்திக்க துவங்கியது. அப்போது புதிதாக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, காங்.,கின் ஓட்டுவங்கியை தன்வசப்படுத்தியது. அதை மீட்க, காங்கிரசால் இன்று வரை முடியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


முரட்டு குணம் கொண்டவர்களுக்கு பாடம்!

ஆம் ஆத்மி வெற்றி குறித்து, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான, 'சாம்னா' வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்களை கொண்ட, பா.ஜ., படையினரை, தனி ஆளாக அரவிந்த் கெஜ்ரிவால் வீழ்த்தி இருக்கிறார். இது, மிகப் பெரிய சாதனை. ஆம் ஆத்மி அரசின் நலத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. இதன் மூலம், தாங்கள் சொல்வது தான் சட்டம் என்ற முரட்டு குணம் கொண்டவர்களுக்கு, மக்கள் பாடம் புகட்டி உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது!

ஆம் ஆத்மி கட்சியின், எம்.எல்.ஏ., நரேஷ் யாதவின் வெற்றி ஊர்வலம் மீது, நேற்று முன் தினம் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில், அக்கட்சியைச் சேர்ந்த அசோக் மன் என்பவர் உயிரிழந்தார்; மேலும் ஒருவர் காயம் அடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய தர்மேந்தர் என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அசோக் மன் - தர்மேந்தர் இடையே இருந்த முன் பகை காரணமாக, இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-202012:56:04 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடை வழங்கியும்கூட பாஜக படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்தத் தோல்விக்கான காரணம் தனது மக்கள்விரோத மதவாத செயல்திட்டம்தான் என்பதை உணர்ந்து பாஜக திருந்துமா? மாறாக, இருக்கும் காலத்திற்குள் இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு பின்னே தள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Rate this:
Cancel
13-பிப்-202012:54:16 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு வளர்ச்சியின் நாயகன் என்றும் அசைக்க முடியாத பிரதமர் என்றும் தினமும் பாஜகவினர் கூறிவந்த நிலையில், 6 ஆண்டுகள் ஆட்சிசெய்த இந்தியாவின் தலைநகரத்து மக்கள் பாஜகவை பொடிப்பொடியாக சிதைத்திருக்கிறார்கள். அத்துடன் அற்புதங்களை நிகழ்த்துபவராக அடிக்கடி வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவையும் நோகடித்திருக்கிறார்கள்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
13-பிப்-202005:43:36 IST Report Abuse
blocked user இலவசத்துக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். இடையில் சிவசேனா கூட கம்பு சுத்த ஆரம்பித்து விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X