சிறுமிக்கு பாலியல் தொல்லை 'பாலிவுட்' நடிகர் மீது வழக்கு

Added : பிப் 12, 2020
Advertisement
 சிறுமிக்கு பாலியல் தொல்லை 'பாலிவுட்' நடிகர் மீது வழக்கு

மும்பை: சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, 'பாலிவுட்' நடிகர் ஷாபாஸ் கான் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, தலைநகர் மும்பையைச் சேர்ந்த, 'பாலிவுட்' நடிகர் ஷாபாஸ் கான், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி, ஓஷிவாரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஷாபாஸ் கான், 'யுக், தி கிரேட் மராத்தா, சந்திரகாந்தா, தி ஸ்வோர்ட் ஆப் திப்பு சுல்தான்' உள்ளிட்ட, பல படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில், 'தெனாலி ராமா' உள்ளிட்ட, பல 'டிவி' சீரியல்களிலும் நடித் துள்ளார். ஷாபாஸ் கான், பத்ம பூஷண் விருது பெற்ற, உஸ்தாத் அமீர்கானின் மகன். இவர், பிரபல சாஸ்திரீய சங்கீத பாடகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X