பொது செய்தி

தமிழ்நாடு

ஓங்கி ஒலித்தது! மூன்றாண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அரங்கில்...முதல் ஒன்றியக் குழு கூட்டம் களைகட்டியது

Added : பிப் 12, 2020
Share
Advertisement
 ஓங்கி ஒலித்தது!  மூன்றாண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அரங்கில்...முதல் ஒன்றியக் குழு கூட்டம் களைகட்டியது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய குழு கூட்டம் மூன்றாண்டுகளுக்கு பிறகு, நேற்று நடந்தது. மக்களால் தேந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டு குரல் கொடுத்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்ற பின், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.தெற்கு ஒன்றிய கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்துக்கு, ஒன்றிய குழு தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். துணை தலைவர் சண்முகசுந்தரம், பி.டி.ஓ., ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் பேசியதாவது:பொள்ளாச்சி கோலார்பட்டியில், மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், அரசு பள்ளிகள் அமைந்துள்ளன. அவ்வழியே செல்லும் பஸ்கள் நிறுத்தாததால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

சிங்காநல்லுாருக்கு வரும் இரு பஸ்களில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. ஒரே பஸ் என்பதால் கூட்ட நெரிசலில் மக்கள் சிரமப்படுகின்றனர். பள்ளி நேரத்துக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும். ரெட்டியாரூர் வழித்தடத்தில் இயங்கும், 56, 27, 47ஏ, பஸ்கள் திடீரென இயங்குவதில்லை. ஞாயிறு உள்ளிட்ட சில நாட்களில் முன்னறிவிப்பின்றி முழுமையாக இயங்குவதில்லை. இப்பிரச்னை குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.சிங்காநல்லுார் ஊராட்சிக்கு கடந்த, 13 ஆண்டுகளாக சுத்திகரிக்கப்படாத ஆற்றுநீர், அப்படியே வினியோகிப்பதால் நோய்கள் பரவுகின்றன.
கம்பாலபட்டி கூட்டுகுடிநீர் திட்டத்தால் பயன்பெறும் எஸ்.நல்லுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு மாதக்கணக்கில் குடிநீர் வழங்குவதில்லை. ஒன்றியத்தின் குடிநீர் வினியோகத்தில் கடைக்கோடியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைவதில்லை. கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், தேவையானஅளவு குடிநீர் வழங்க வேண்டியது அவசியம்.ஊராட்சி ரோடுகளில், எவ்வித அனுமதியும் பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பங்கள் நடப்படுகின்றன.

ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பிறகே மின்கம்பம் அமைக்க வேண்டும். நுாலகங்களுக்கு வணிக மின்இணைப்பு கொடுத்திருப்பதால், அதிக மின்கட்டணம் வருகிறது. வீட்டு இணைப்பாக மாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.கேட்க ஆளின்றி இருந்த பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து, உள்ளாட்சி பிரதிநிதிகளின் குரல், கூட்ட அரங்கில் ஒலிக்க துவங்கியுள்ளது;

தீர்வுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கணவர்கள் ஆதிக்கம்!குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பதிலளிக்கையில், 'குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த, குழாய் மாற்றுவது, கூடுதல் பம்ப்செட்கள், பூஸ்டர்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் வினியோகம் சீராகும்,' என்றனர்.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'சுட்டிக்காட்டப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, 10 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்,' என்றனர்.

கூட்டத்தில், சில பெண் கவுன்சிலர்கள், வாயே திறக்கவில்லை. மாறாக அவர்களின் கணவர்கள் கூட்ட அரங்கில் பேசினர். சில ஊராட்சி தலைவர்களும் கூட்டத்தில் தலையிட்டு பேசினர். கணவர்கள் ஆதிக்கம்!குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பதிலளிக்கையில், 'குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த, குழாய் மாற்றுவது, கூடுதல் பம்ப்செட்கள், பூஸ்டர்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் வினியோகம் சீராகும்,' என்றனர்.

ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'சுட்டிக்காட்டப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, 10 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்,' என்றனர்.கூட்டத்தில், சில பெண் கவுன்சிலர்கள், வாயே திறக்கவில்லை. மாறாக அவர்களின் கணவர்கள் கூட்ட அரங்கில் பேசினர். சில ஊராட்சி தலைவர்களும் கூட்டத்தில் தலையிட்டு பேசினர்.'முதல் கூட்டம் என்பதால், விதிகள் குறித்து தெரியாமல் அவர்கள் பேசியிருக்கலாம்; அடுத்த கூட்டத்தில் இந்த விதிமீறல்கள் இருக்காது,' என ஒன்றிய அதிகாரிகள் சமாளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X