பசிபிக் பெருங்கடலில் தத்தளித்த நான்கு பேர் உயிருடன் மீட்பு

Added : பிப் 12, 2020
Advertisement

வெல்லிங்டன்: பசிபிப் பெருங்கடலில், 32 நாட்களாக தத்தளித்த, பப்புவா நியூ கினியாவை சேர்ந்த நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவின் வட பகுதியில், தீவு நாடான பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது. அந்நாட்டில் போகன்வில் என்ற தன்னாட்சி மாகாணம் உள்ளது. பசிபிக் பெருங்கடலில் இருக்கும் அந்த மாகாணத்தை சேர்ந்த ஒரு குழுவினர், கடந்த டிசம்பர், 22ம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட, கார்டரட் தீவுகளுக்குச் சென்றனர். 100 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள அந்த தீவுகளுக்கு செல்லும் வழியில், அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில், குழந்தை உள்ளிட்ட, எட்டு பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதில், உயிர் தப்பியவர்கள், படகை மீண்டும் இயக்க கடுமையாக போராடினர். கடல் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால், அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். படகும் நீரில் மூழ்கியது. வேறு வழியில்லாத அவர்கள், கடலில் மிதந்தவாறு சென்றுள்ளனர். சிறிதும் மனம் தளராமல், கிடைத்த தேங்காய்களை உண்டும், மழைநீரைப் பருகியும், தங்களை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளை எடுத்தனர். பசிபிக் பெருங்கடலில், 32 நாட்களாக தத்தளித்த அவர்கள், ஜனவரி, 23ம் தேதி, நியூ கலிடோனியா தீவுக்கு அருகே மீட்கப்பட்டனர்.

இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி என, நான்கு பேரையும், படகில் வந்த மீனவர்கள் காப்பாற்றினர். சாலமன் தீவுகளின் தலைநகர் ஹோனியாராவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு, அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X