வீட்டு காய்கறி தோட்டம் 7 வகை விதை வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு காய்கறி தோட்டம் 7 வகை விதை வினியோகம்

Added : பிப் 12, 2020
Share
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ராசக்காபாளையத்தில் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க, 100 பெண்களுக்கு ஏழு வகையான விதைகள் வழங்கி, பயிற்சி அளிக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் விவசாய உற்பத்தியாளர் குழுவினருக்கு, வீட்டு தோட்ட காய்கறி விதைகள் வழங்கும் விழா பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ராசக்காபாளையத்தில் நடந்தது. விழாவுக்கு,

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ராசக்காபாளையத்தில் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க, 100 பெண்களுக்கு ஏழு வகையான விதைகள் வழங்கி, பயிற்சி அளிக்கப்பட்டது.

தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் விவசாய உற்பத்தியாளர் குழுவினருக்கு, வீட்டு தோட்ட காய்கறி விதைகள் வழங்கும் விழா பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ராசக்காபாளையத்தில் நடந்தது. விழாவுக்கு, பொள்ளாச்சி வடக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி முன்னிலை வகித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர் விக்னேஷ்குமார் வரவேற்றார்.

இதில், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் செல்வராஜ் பங்கேற்று, பெண்களுக்கு வீட்டு தோட்டம் அமைக்க பயிற்சி வழங்கி, தக்காளி, கொத்தவரை, சுரைக்காய் மற்றும் கீரை உள்பட ஏழு வகையான விதைகள் வழங்கினார்.மேலும், வீட்டுதோட்டம் அமைத்து, கிடைக்கும் சத்தான காய்கறிகளை உணவுடன் சேர்த்து உட்கொள்ள கோரிக்கை விடுத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X