உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு

Added : பிப் 12, 2020
Share

உடுமலை : உடுமலை, போடிபட்டி அங்கன்வாடி மையத்தில், உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்.

போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கான உணவு துாய்மையாக தயாரிக்கப்படுவது, தரமுள்ள பொருட்களை பயன்படுத்துவது குறித்து வட்டார உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்.குடிநீர் மற்றும் உணவு குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அம்ஜத்கான் ஆய்வு செய்தார். பெற்றோருக்கு, குழந்தைகள் பின்பற்ற வேண்டிய உணவு முறை பழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, வாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு, தன்சுத்தம், நோய் தொற்று ஏற்படாமல் கைகளை துாய்மையாக பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X