ரோஜா பூக்களுக்கு இன்னும் மவுசு குறையல... நாளை காதலர் தினம் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோஜா பூக்களுக்கு இன்னும் மவுசு குறையல... நாளை காதலர் தினம் கொண்டாட்டம்

Added : பிப் 12, 2020
Share
 ரோஜா பூக்களுக்கு இன்னும் மவுசு குறையல... நாளை காதலர் தினம் கொண்டாட்டம்

பொள்ளாச்சி : அன்பை வெளிப்படுத்த உதவும் ரோஜா பூக்களுக்கு இன்னும் மவுசு குறையாததால், இந்தாண்டும் காதலர் தினத்தில் விற்பனை சூடுபிடித்துள்ளது.

பிப்., 14ம் தேதி அன்பை வெளிப்படுத்தும் விதமாக, காதலர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் காதலை வெளிப்படுத்தும் நாட்களாக மட்டும் பார்க்காமால், திருமணம் ஆனவர்கள், மனைவி குழந்தைகளிடமும் அன்பை வெளிப்படுத்தும் நாளாகவும் கொண்டாடுகின்றனர்.காதலர் தினம் என்றாலே காதலர்கள் மட்டும் என்ற எண்ணம் மாறி தற்போது, அன்பை வெளிப்படுத்தும் நாளாக மாறி வருகிறது.

காதலர் தினத்தில் ரோஜாப் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. காதலை வெளிப்படுத்தவும் வாழ்த்து அட்டைகளோடு ரோஜாப்பூக்கள் கொடுப்பது, காலமாறியும் மாறாத ஒன்றாக உள்ளது.இந்தாண்டும் காதலர் தினம் நாளை (14ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா பூக்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.ரோஜாப்பூ வியாபாரிகள் கூறுகையில், 'பெங்களூரு, ஓசூரில் இருந்து ரோஜாப்பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

ரோஜாப்பூ, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காலங்கள் மாறினாலும் அன்பை வெளிப்படுத்த ரோஜாப்பூக்களை வாங்க யாரும் மறப்பதில்லை. இதனால் விற்பனை நன்றாக உள்ளது. காதலர் தினத்தில் கூடுதலாக விற்கும் என எதிர்பார்க்கலாம்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X