பொது செய்தி

இந்தியா

வங்கியால் அடித்தட்டு மக்கள் பயன் பெற வேண்டும்: கோவிந்த்

Added : பிப் 12, 2020
Advertisement
 வங்கியால் அடித்தட்டு மக்கள்  பயன் பெற வேண்டும்: கோவிந்த்

புனே: ''வங்கி வாசமே அறியாத ஏராளமானோருக்கு, கணக்கு துவக்கி, அவர்களை அமைப்பு சார்ந்த நிதி துறையில் இணைத்த வங்கிகளின் செயல்பாடு பாராட்டுக்குரியது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில், தேசிய வங்கி மேலாண்மை மையத்தின் பொன்விழாவில், அவர் பேசியதாவது:ஏழைகளின் ஒட்டுமொத்த பொருளாதார வலிமையை சார்ந்து தான், ஒரு நாட்டின் முன்னேற்றம் உள்ளது. அதனால், வங்கிச் சேவை பெறாத குடிமகனே இல்லை என்ற நிலையை, வங்கிகள் ஏற்படுத்த வேண்டும். வங்கிகளின் சிறப்பான முயற்சியால், வங்கிச் சேவையை பெறாமல் இருந்த ஏராளமானோர், வங்கிக் கணக்கு துவக்கி, அமைப்பு சார்ந்த நிதி துறையில் இணைந்து உள்ளனர்.

அத்துடன் நின்று விடாமல், அவர்களை வங்கிப் பரிவர்த்தனைகளில் ஆழமாக ஈடுபடுத்த வேண்டிய சவாலும் நமக்கு உள்ளது. அதனால், அடித்தட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய நிதித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து, வங்கிகள் சிந்திக்க வேண்டும். அமைப்பு சார்ந்த நிதித் துறையில் அதிக அளவிலான மக்களை சேர்ப்பதன் மூலம், வங்கிகள், சந்தையில் மேலும் வலுவாக காலுான்றவும், இடர்பாடற்ற செயல்பாடுகளை மேற்கொள்ளவும் முடியும்.

மத்திய அரசு, 2024--- 25ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை அடைய, வங்கிச் சேவை கிடைக்காதோருக்கு அச்சேவை கிடைக்கச் செய்வதும், நிதிப் பாதுகாப்பு இல்லாதோருக்கு அத்தகைய பாதுகாப்பை வழங்குவதும் முக்கியமாகும். சமீபகாலமாக, வங்கித் துறையை ஒழுங்குபடுத்த, ரிசர்வ் வங்கி சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது.

இது, மோசடிகளை தடுக்கவும், நம் நிதித் துறையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் உதவும்.உலகளவில் முன்னணியில் உள்ள, 100 வங்கிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய வங்கிகள் இடம்பெற வேண்டும். எக்காரணத்திலும், ஒரு தொழில் முனைவோரின் நல்ல உத்தி, நிதி இல்லாமல் நின்று போக விட்டு விட வேண்டாம் என, வங்கிகளை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X